

இமெயில்கள், சமூக ஊடகங்கள், நெட் பேங்கிங் என பாஸ்வேர்டுகள் பெருகிக்கொண்டே போகின்றன. எல்லா பாஸ்வேர்டுகளையும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? இன்னொருபுறம், என்னதான் பாதுகாப்பு வசதிகள் மொபைல் போனில் இருந்தாலும், தகவல் திருட்டுகளும் சாதாரணமாகவே நடக்கின்றன. இவற்றுக்கு என்னதான் தீர்வு என பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரூம்போட்டு ஆராய்ந்தனர். இறுதியில் பாஸ்வேர்டுக்குப் பதிலாக வரைபடமே தீர்வு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
Background Draw-a-Secret (BDAS) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நாம் வரையும் படத்தைப் பதிவுசெய்து தகவல்களைப் பாதுகாக்க முடியுமாம். தொடர்ந்து மொபைலைப் பாதுகாக்க நாம் வரைந்த உருவத்தின் மீது ட்ரேஸ் செய்தாலே போதும். எனவே, இனி பாஸ்வேர்டுகளை மூளையில் ஏற்றிக்கொள்ளவும் தேவையில்லை. ஒரு வேளை பாஸ்வேர்டான டூடூளை மாற்றிக்கொள்ள விரும்பினால், இமெயில் வெரிஃபிகேஷனும் உண்டு. எளிமையான புதுமையான பாஸ்வேர்டு என்கிற முறையில் இதை முன்னேற்றமாகப் பார்க்கிறது தகவல் தொழில்நுட்ப உலகம்!