நட்டு போல்ட்டு காக்கா!

நட்டு போல்ட்டு காக்கா!
Updated on
2 min read

வீ

ட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பழைய கழிவுப் பொருட்களிலிருந்து மட்டும்தான் கலைநயமிக்க பொருட்களை உருவாக்க முடியுமா என்ன? பெரிய நிறுவனங்களிலிருந்து கழித்துக் கட்டப்படும் பொருள்களையும் கலைப் படைப்பாக மாற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் ஹூண்டாய் ஊழியர்கள்.

ஒவ்வோர் ஆண்டும் ஆயதபூஜையின்போது கார் தொழிற்சாலை கழிவுகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டு கலைப் பொருட்களை கண்காட்சியாக வைப்பது ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் வாடிக்கை. இந்த ஆண்டுக்கான கண்காட்சி சென்னை அடையாறு இன்கோ மையத்தில் ‘ஸ்க்ராப் டர்ன்ஸ் டூ ஆர்ட் @ ஹூண்டாய்’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியில், கார் தொழிற்சாலையின் கழிவுகளிலிருந்து ஹூண்டாய் ஊழியர்கள் உருவாக்கிய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஓவியர்கள் எனப் பல தரப்பினர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

நட்டு போல்ட்டுகளில் உருவாக்கப்பட்டிருந்த காகம்-பானை சிற்பம், குதிரை சிற்பம், கார் செயினில் உருவாக்கப்பட்ட கடிகாரம் உள்பட பல கலைப்பொருட்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. “ வழக்கமான பணிச்சூழலிலிருந்து விலகி, எங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கு இந்தக் கண்காட்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கலை பொருட்களைப் பார்த்த ஊழியர்கள் பலரும், அடுத்த ஆண்டு தாங்களும் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்தனர்” என்று சொல்கிறார் இந்தக் கலைப்பொருட்களை உருவாக்கியவர்களில் ஒருவரான ஹூண்டாய் ஊழியர் கார்த்திகேயன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in