

2012-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், நொசோமி ஒக்குஹராவுடன் மோதும்போது, சிந்துவுக்குத் தெரியாது… இவர்தான், பின்னாளில் தனக்கான ‘பெர்ஃபெக்ட் காம்படீட்டர்’ என்பது! தற்போது இருவருக்கும் வயது 22. டென்னிஸ் போட்டியில், எப்படி ரோஜர் ஃபெடரரும் ரஃபேல் நடாலும் ரசிகர்கள் விரும்பும் போட்டியாளர்களாக இருக்கிறார்களோ, அதேபோல, இன்று பாட்மிண்டன் மைதானத்தில், சிந்துவும் ஒக்குஹராவும்.
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதியில் ஒக்குஹராவை எதிர்கொண்டார் சிந்து. அதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்த சிந்து, இந்தியாவுக்கு வெள்ளியைப் பெற்றுத் தந்தார். அதன் பிறகு, உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இருவரும் மோதினார்கள். அதில் ஒக்குஹரா, தங்கம் வென்று, இந்தப் போட்டியில் வாகை சூடிய முதல் ஜப்பான் மங்கை என்ற பெருமையைப் பெற்றார்.
அதற்கடுத்த சில வாரங்களில், கொரிய ஓபன் சீரிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில்
தன்னுடைய ‘கரியரில்’ இரண்டாவது முறையாக, தரவரிசையில் 2-வது இடத்தைப் பெற்றிருக்கிறார் சிந்து. வெற்றியும் தோல்வியும் மாறிமாறி அவரின் ‘கோர்ட்டில்’ விழுந்துகொண்டிருக்கின்றன. அதிலிருந்து, அவர் பாடமும் கற்றுக்கொண்டே இருக்கிறார். நிச்சயம், அடுத்த சில வருடங்களுக்கு உலக பாட்மிண்டன் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துபவராக சிந்து இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்தப் போட்டிகளில் ஒக்குஹராதான் அவருக்கு ‘டஃப்’ கொடுப்பார் என்பதிலும் சந்தேகமில்லை!