

க
ம்ப்யூட்டர்களில் விண்டோஸ் மென்பொருள்தான் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் உருவாக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சுக்கு சின்னதாக ஒரு வருத்தம் இருக்கிறது. அதாவது, கம்ப்யூட்டர் விசைப் பலகையில் உள்ள கண்ட்ரோல்+ ஆல்ட்+ டெலிட் என்ற விசை இருப்பதுதான் பில் கேட்சின் வருத்தத்துக்குக் காரணம். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இதை பில் கேட்ஸ் வெளிப்படுத்தினார்.
“கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட செயலை இடைமறிக்க உதவும் இந்த வசதி இத்தனை சிக்கலானதாக இருப்பது தவறு. பின்னோக்கிச் செல்ல முடிந்தால் இந்த விசையை ஒற்றை கிளிக் கொண்ட பட்டனாக மாற்றிவிடுவேன். எனக்கு இந்த விசையில் உடன்பாடு இல்லை. அதை உருவாக்கிய ஐபிஎம் பொறியாளர்கள் இந்த விசைத்தொடரை வைத்துவிட்டதாக” தெரிவித்துள்ளார் பில் கேட்ஸ்.
இது தொடர்பாக ஏற்கெனவே ஒரு முறை பில் கேட்ஸ் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். தற்போது மீண்டும் இதைப் பற்றி பேசியுள்ளார். நீங்கள் சொல்லுங்கள், கண்ட்ரோல்+ ஆல்ட்+ டெலிட் தேவைதானா?