

மருத்துவ மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் தனித் திறமைகளை வெளிப்படுத்தம் வகையில், ஆண்டுதோறும் 'ஸ்பந்தன் கலை விழா’ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ‘ஸபந்தன் கலைவிழா’ அண்மையில் நடைபெற்றது. பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த மருத்துவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தன.
விழாவின் சிறப்பசம்மாக கண்கவர் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி களைகட்டியது. வித்தியாசமான ஆடைகளை மருத்துவ மாணவர்களும் மாணவிகளும் உடுத்தி, ராம்ப் வாக்கில் வந்து பார்வையாளர்களை பரவசமூட்டினர். ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியின் ஆல்பத்திலிருந்து சில ஒளிப்படங்கள்:
படங்கள்: சாம்ராஜ்