வயது மூத்த பூனை

வயது மூத்த பூனை
Updated on
1 min read

பூனைகளின் ஆயுட்காலம் சராசரியாக 15 - 16 வருடங்கள்தான். ஆனால் பாபி என்ற பூனை தனது 24 வயது பிறந்த நாளைக் கடந்த பிப்ரவரியில்தான் கொண்டாடியது. இந்தச் சாதனைக்காக பாபிக்கு கின்னஸ் புத்தகத்திலும் இடம் கிடைத்தது. பூனைக்கு 24 வயது வரை வாழ்வது மனிதன் 114 வருடங்கள் வாழ்வதற்குச் சமமானது.

இங்கிலாந்தின் கடற்கரை நகரமான போர்ன்மட்டைச் சேர்ந்த ஜாக்கி என்பவருக்குச் சொந்தமானது இந்தப் பூனை. 1990-ம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலையான பிப்ரவரி மாதம் பாப்பி பிறந்தது. இதுவரை இங்கிலாந்தின் ஐந்து பிரதமர்களைக் கண்டிருக்கிறது. கடந்த மே மாதம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சில வாரங்களிலேயே பாபிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. பாபியின் பின்னங்காலில் ஏற்பட்ட புண் காரணமாகவும், நீர் தொற்று நோய் காரணமாகவும் அது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாபியின் உரிமையாளரான ஜாக்குயி வெஸ்ட் கூறுகையில், “அதற்கு வயதாகி விட்டது, ஆனாலும் அது காலமானது வருத்தத்தை அளிக்கிறது. கடந்த வாரம் அதற்கு மோசமான வாரமாக அமைந்துவிட்டது.”

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in