

இன்று இளைஞர்களின் டிரெண்ட் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லாரையும் நட்பு வட்டத்தில் இணைத்துக்கொள்கிற மனோபாவம் பரவலாக வளர்ந்திருக்கிறது. சென்ற தலைமுறை வரை நண்பர்கள் என்றாலே நாம் வசிக்கிற தெருவில் பழகுபவர்களும் கல்லூரி நண்பர்களும் என்றுதான் இருந்தது. ஆனால், தற்போது அதன் எல்லை சர்வதேச அளவுக்கு விரிவடைந்துவிட்டது.
அதற்குக் காரணம், இணையம். அது தாக்கம் செலுத்தாத மனிதர்களே இன்று கிடையாது. அந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதோடு சமூக வலைத்தளங்களின் பயன்பாடும் திறன்பேசிகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போலவே கருதுகிற மனப்பான்மையும் பரவியிருக்கிறது. குறிப்பாக, பதின்பருவத்தினர், கல்லூரியில் படிப்போர் மத்தியில் இதன் தாக்கம் சற்று அதிகமே.
ஒரு பதிவில் பதில்
முன்பு மின்னஞ்சல் முக்கியமாக இருந்தது மாறி, சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்பதும் இந்தக் காலகட்டத்தில் அவசியமாகிவிட்டது. அப்படிக் கணக்கு இல்லை என்றால், ‘பூமர் அங்கிள் மாதிரி இருக்கியே..’ என்று கலாய்த்துத் தள்ளிவிட எப்போதும் நம்மைச் சுற்றி ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் ‘குட் மார்னிங்’ சொல்வதில் தொடங்கி ‘குட் நைட்’ வரையும் மீம்ஸ், காணொளி, நகைச்சுவைச் செய்தி, திரைப்படக் காட்சிகள் எனப் பலவும் இளைஞர்களை ஆக்கிரமித்துவிடுகின்றன. அரட்டைப் பதிவுக்கு ஆதரவுக் கருத்தோ எதிர்க் கருத்தோ சொல்லி நட்பு வட்டங்கள் பெரும்பாலும் நேரத்தை வீணடிக்கின்றன. எப்போதும் திறன்பேசியும் கையுமாக இருப்பதைக் கண்டு பெற்றோர் எரிந்துவிழுவதை எல்லா இளைஞர்களுமே எதிர்கொண்டிருப்பார்கள்.
சமூக ஊடகங்கள் வாயிலாக எல்லைகளைக் கடந்து உறவுகளையும் நட்புகளையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் எத்தனை பேர், அதை நம்முடைய ‘வளர்ச்சி’க்காகப் பயன்படுத்திக் கொள்கிறோம்? இன்று ஒரு பதிவோ காணொளியோ எவ்வளவு விரைவாக வைரல் ஆகிறது? சில நாட்களுக்கு முன்பு சிவகங்கையைச் சேர்ந்த கெளதம் என்கிற இளைஞர் தான் தயாரித்த ஒரு ஜீப்பை சமூக ஊடகப் பதிவில் பதிந்து மகிந்திரா