

வெளிநாடுகளில் மவுசு குறையாத உணவு வகைகளில் ஒன்று பீட்சா. இதில் வெஜ், சீஸ், சிக்கன், சாக்லேட், ஐஸ்கிரீம் எனப் பல வகைகள் உண்டு. ஆனால், பீட்சா தயாரிப்பாளர்கள் சிலர் புதிய வகைகளை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில், பல புதிய வகை பீட்சாக்களைத் தயாரிக்கும் காணொளிகள் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியிருக்கின்றன. தற்போது இத்தாலியில் புதிய முயற்சியாக ஐஸ் க்யூப் பீட்சா தயாராவது சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. செஃப் ஒருவர் ஐஸ் கட்டிகளையும் சீஸையும் பயன்படுத்தி இந்த பீட்சாவை உருவாக்கியிருக்கிறார்.
வித்தியாசமான உணவுக் கலவையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பீட்சாவை சமூக வலைத் தளங்களில் அந்த செஃப் பதிவிட்ட பிறகு, அந்தக் காணொளி வேகமாக வைரல் ஆனது. அந்தக் காணொளியைக் கண்டு பீட்சா பிரியர்கள் லைக்ஸ்களைப் பறக்க விட்டிருக்கிறார்கள். என்றாலும், இன்னும் பல பீட்சா பிரியர்கள், ‘இது உணவைக் கெடுக்கும் செயல்’ என்று எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள்.
ஐஸ் க்யூப் பீட்சாவைத் தொடர்ந்து இன்னும் என்னென்ன பீட்சாக்கள் வருமோ?