வீடியோ புதிது: காது கொடுத்துக் கேளுங்கள்!

வீடியோ புதிது: காது கொடுத்துக் கேளுங்கள்!
Updated on
1 min read

பொது மேடைகளில் சிறப்பாகப் பேசுவது எப்படி என வழிகாட்டும் புத்தகங்களும் ஆலோசனைகளும் நிறையவே இருக்கின்றன. நல்ல பேச்சாளராக வேண்டும் என்ற விருப்பம் உள்ள‌ உங்களுக்குப் பேச்சுக்கலை நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்கலாம். எல்லாம் சரி, நல்ல கேட்பாளராக இருப்பது எப்படி என எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

அதாவது மற்றவர்கள் சொல்வதை நல்ல முறையில் கவனித்துக் கேட்பவராக இருந்திருக்கிறீர்களா?

இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் ‘ஸ்கூல் ஆப் லைஃப்' இணையதளம், சிறந்த கேட்பாளராக இருப்பது எப்படி என வழிகாட்டும் வீடியோவை உருவாக்கியுள்ளது.

பிளாட்டோ, அரிஸ்டாட்டில் என எல்லோரும் பேசத்தான் கற்றுக் கொடுத்துள்ளனரே தவிர, கேட்பதற்கு யாரும் சொல்லித்தரவில்லை என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டிருப்பது சிந்தனைக்குரிய விஷயம்.

நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்: > https://youtu.be/-BdbiZcNBXg

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in