இன்ஸ்டா இனி முழுத் திரையில் காணலாம்!

இன்ஸ்டா இனி முழுத் திரையில் காணலாம்!
Updated on
1 min read

இன்ஸ்டாகிராமை இனி முழுத்திரையாகப் பார்க்க முடியும். அதற்கான சோதனையில் இன்ஸ்டா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் டிக் டாக் தடைசெய்யப்பட்ட பிறகு அதற்கு இணையாக இன்ஸ்டா ரீல் இருந்துவருகிறது. இது இந்தியாவில் இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாழ்வியல், பொழுதுபோக்கு செயலியாக இருக்கிறது.

பயனர்களின் உள்ளடக்கத்தைத் தெளிவாகக் கண்டு ரசிக்க இந்த முறை உதவும் என மெட்டாவின் செய்தித் தொடர்பாளர் செய்ன் கிம் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்த முறை குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டும் முதற்கட்டமாகச் சோதனை அடிப்படையில் அளிக்கப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி அந்த ஆப்ஷன் அளிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பயனர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், உங்கள் இன்ஸ்டாகிராம் ஃபீடிங்கை ஸ்க்ரோல் செய்யும்போது முழுத்திரை பயன்முறையில் வீடியோக்களைப் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஃபுல் ஸ்கிரீன் ஃபீட் சோதனை முன்னோட்டத்தைப் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமின் புதிய தோற்றம் டிக் டாக் ஃபீடைப் போல் இருக்கும் என்றும் சோதனையில் உள்ள இந்த ஆப்ஷன் எல்லாப் பயனர்களுக்கும் விரைவில் அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், இன்ஸ்டாகிராம் முழுத்திரை புகைப்படங்கள், வீடியோக்களைப் பரிசோதித்துப் பார்த்தது. ஆனால், திரையின் கீழேயும் மேலேயும் வெள்ளைக் கோடுகளுடன் முழுமை பெறாமல் அந்தச் சோதனை வெற்றிபெறவில்லை.

இன்பாக்ஸை அணுகுவதிலும் புதிய இடுகைகளை உருவாக்குவதிலும் இன்ஸ்டாவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இன்ஸ்டாகிராமின் புதிய தோற்றம் டிக் டாக்கின் முறையைப் போலவே இருக்கும் எனச் சொல்லபடுகிறது.
சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலிக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் இதுபோன்ற மாற்றங்களைச் செய்வது இதுவே முதல் முறை. மேலும், டிக் டாக்கைப் போலவே இந்த முழுத்திரை பயன்முறையைப் பயன்படுத்தப் போவதில் இந்தியப் பயனர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என லைஃப் ஸ்டைல் வீடியோ ஆர்வலர்கள் சொல்லியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in