

இந்தியா - தென்னப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள டி 20 தொடர் நாளை டெல்லியில் தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது.
இவ்விரு அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி நாளை இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா போன்ற முதல் நிலை வீரர்கள் விளையாடவில்லை. அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தப் போட்டி இளம் வீரர்களுக்குத் தங்கள் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த மாதம் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள 8ஆவது உலகக் கோப்பை டி 20 போட்டிக்கு இது வெள்ளோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை விளையாட அணியில் 11 பேரில் யார் இடம் பிடிக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஐபிஎலின் தன் திறமையை நிரூபித்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு இடம் கிடைக்குமா, என்பது தமிழக ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதே நேரம் ஐபிஎல் நட்சத்திரமான காஷ்மீர் வேகப் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஐபிஎலில் சன்ரைசர்ஸில் குஜராத் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத் தகுந்து. பந்து வீச்சைப் பொருத்தவரை புவனேஷ்குமார், ஹர்ஷத் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தினேஷ் கார்த்திக் குறித்த கேளிவிக்கு, “அவர் ஆட்டத்தை முடிப்பதில் வல்லமை மிக்கவர். அதற்காகத்தான் அவர் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்” எனப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துளார்.