

சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் ஆகிய சகோதர்களுடன் அவர்களுடைய தாத்தா பெரிய தம்பியும் இணைந்து உருவானதுதான் இந்த வில்லேஜ் குக்கிங் யுடியூப் சானல். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்களில் சுப்பிரமணியன்தான் இதன் மூல கர்த்தா,. காமிராவையும் தொழில்நுட்பத்தையும் இவர்தான் கவனிக்கிறார். சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கமல் ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் இந்தக் குழுவினர் தலைகாட்டியுள்ளனர்.
இவர் எம்பில் பட்டதாரி ஆவார். 2018-ல் உணவு தொடர்பான வீடியோக்களை உருவாக்க நினைத்தார். அவரது சகோதர்கள் வேலைக்காக வெளிநாடு செல்லத் தீர்மானித்திருந்த காலம் அது. அப்போது சிறு முயற்சியாக வீடியோக்களை உருவாக்கியிருக்கிறார்கள். மற்ற வீடியோக்களில் இருந்து வித்தியாசப்பட்டுத் தனித்துவமான வீடியோக்களை உருவாக்கத் தொடங்கியபோது அவர்களுக்குப் பார்வைகள் கிட்டத் தொடங்கின.
வீட்டுக்குள் சமையல் வீடியோக்கள் அடைபட்டுக் கிடந்தபோது இவர்கள் அதை அசாலான கிராமத்து வெளிக்கு எடுத்து வந்தனர். காட்டுப் பகுதியில் கல் வைத்து அடுப்பு மூட்டி சமையல் செய்தனர். இதற்காகவே பலரும் இந்த சானலைப் பாக்கின்றனர் எனலாம். அம்மி வைத்து மசாலா அரைப்பதைப் பார்ப்பதே அலாதியானது. அய்யனார் ‘மங்கலகரமான மஞ்சள்’ எனத் தொடங்கும்போது பார்ப்பதற்கே சுவையாக இருக்கும். இவருக்கெனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதுபோல் காய்கறிகள் வெட்டுவதிலும் தனித்துவம். சமையல் செய்வதற்காக இடம் தேடி அலைவது, அதற்கான பாத்திரங்கள், அடுப்பு மூட்டக் கல் என இதற்காக அவர்கள் வரும் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கைச் செலவிடுகிறார்கள். அதுபோல் எந்தச் சமையல் செய்தாலும் குறைந்தது 100 பேருக்குச் சமைக்கிறார்கள். அதனால் அதற்கும் செலவாகிறது. சாப்பாட்டை முதியோர் இல்லம், ஊரார் ஆகியோருடன் இணைந்து உண்கிறார்கள்.
இவர்களின் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ 48 மணி நேரத்தில் 90 லட்சம் பார்வைகளைக் கடந்தது. மட்டுமல்லாமல் அவர்காளது சந்தாதரர்கள் எண்ணிக்கையும் பன் மடங்கு அதிகரித்தது.
இவர்களது வீடியோ வெறும் சமையலை மட்டுமின்றி, சுற்றுப் புறங்களை ஒரு வாழ்க்கை முறையையும் பதிவுசெய்கிறது. இதன் மூலம் சுவையுடன் பார்வையாளர்களி ஞபாகங்களும் தூண்டப்படுகிறது. தென்னிந்தியாவின் முதல் டைமண்ட ப்ளே பட்டன் அந்தஸ்தைப் பெற்றுள்ளது இந்த சானல்.