பழைய பஸ் இன்று வகுப்பறை

பழைய பஸ் இன்று வகுப்பறை
Updated on
1 min read

மாணவர்களுக்குக் கல்லூரிகள் பிடிக்கும். அங்குள்ள சூழல், நண்பர்கள் எல்லாம் பிடிக்கும். வகுப்பறை பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்காது. அதனால் வகுப்புகளை கட் அடித்துவிட்டு கேண்டீனிலோ வளாகத்தில் வேறு எங்காவது இருந்து அரட்டை அடிப்பார்கள். அப்படியான மாணவர்களை வகுப்பறையில் இருக்கவைக்கப் புதுமையான முயற்சியைப் பல கல்லூரிகள் முயன்று வருகின்றன. அப்படியான ஒரு முயற்சிதான் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் காரியவட்டம் வளாகத்தில்தான் இந்தப் புதுமையான சம்பவம் நடந்துள்ளது. காரியவட்டம் வளாகத்தில் உயிரியல் தொழிநுட்பத் துறைக்கான வகுப்பறைதான் இது. மாணவர்களைப் புதுமையான சூழல் அவசியம் எனக் கருதியதால் இந்தத் திட்டத்தை ஆலோசித்ததாகச் சொல்கிறார் பேராசிரியர் அச்சுதானந்த சங்கரதாஸ்.

இத்துறையின் தலைவரான இவர்தான் இதற்கான முயற்சியை எடுத்துள்ளார். இதற்காகக் கேரளப் போக்குவரத்துக் கழகத்தை நாடியிருக்கிறார். அங்கு இரும்புக் கழிவாக்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸை இவர்களுக்கு அளித்தனர். அந்த பஸ்ஸில் விளக்குகள், மின் விசிறி எல்லாம் பொருத்தி வகுப்பறை ஆக்கிவிட்டனர். அதில் மாணவர்களைக் கவரும் வகையில் ஜன்னல் ஓரத்தில், படிப்பிஸ்ட், கடைசி பெஞ்ச், குழப்பவாதி எனப் பொருள் படும் மலையாளச் சொற்களை எழுதிவைத்துள்ளனர். இந்தப் புதிய வகுப்பறை தங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருப்பதாக மாணவர்கள் சொல்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் இந்த வகுப்பறை வேலைபார்ப்பது நல்ல அனுபவமாக இருப்பதாகத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in