டெக் ஷாட்கட்ஸ்: வாட்ஸ் அப் தந்திரங்கள்

டெக் ஷாட்கட்ஸ்: வாட்ஸ் அப் தந்திரங்கள்
Updated on
1 min read

தகவல் தொழில்நுட்பம் வளர வளர தகவல் பரிமாற்றங்களும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. ஒருவருக்கு நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை விரைவாகவும் தெளிவாகவும் அனுப்பப் பல செயலிகள் இருந்தாலும், வாட்ஸ் அப் செயலியே அவற்றில் முதன்மையானதாக இருக்கிறது. வாட்ஸ் அப் செயலியில் டைப் செய்யும்போது குறிப்பிட்ட வார்த்தைகளைத் தடித்ததாகவோ (Bold), சாய்வாகவோ (Italic), வார்த்தைகளின் நடுவில் கோடிட்டு அடித்தோ (Strike) அனுப்ப முடியும். அதற்கான எளிய வழிமுறைகள்:

  • வார்த்தைகளைத் தடித்தலாக்க : வார்த்தைக்கு முன்னும் பின்னும் * நட்சத்திர (Star) குறியைப் போட்டால் தடித்தலாகிவிடும்.
  • வார்த்தைகளைச் சாய்வாக்க : வார்த்தைக்கு முன்னும் பின்னும் _ அடிக்கோடு (underscore) குறியைப் போட்டால் சாய்வாகிவிடும்.
  • வார்த்தைகளின் நடுவில் கோடிட்டு அடிக்க : வார்த்தைக்கு முன்னும் பின்னும் ~ டில்ட் (tilde) குறியைப் போட்டால் நடுவில் கோடிட்டது போல் வரும்.

முயன்று பாருங்களேன்.

- சுரேஷ் ஜி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in