

யூடியூப் இன்று நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. செய்தி, சமையல், கேளிக்கை, சினிமா, கல்வி, தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும், அது குறித்து நாம் தேடும் இடம் யூடியூப் ஆகவே இருக்கிறது. யூடியூப் செயலியைப் பொறுத்தவரை, அதில் நாம் அனைத்தையும் வீடியோ வடிவில்தான் பார்க்க முடியும். அதில் ஒளி இன்றி ஒலியை மட்டும் கேட்க முடியாது. அலுவலகத்திலோ அல்லது பொது இடத்திலோ இருக்கும்போது இது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். அதாவது, யூடியூப் திரையை மினிமைஸ் செய்தோ அல்லது மொபைல் திரையை லாக் செய்தோ நம்மால் யூடியூப்பில் வீடியோ பார்க்க முடியாது. அந்த வசதி தேவை என்றால், அதற்கு நாம் யூடியூப்பில் கட்டணம் செலுத்து பிரீமியர் உறுப்பினராக மாற வேண்டும். இதற்கும் கட்டணமா என்று நீங்கள் சலிப்படைய வேண்டாம். அதற்கு ஃபயர் பாக்ஸ் பிரவுசரில் ஒரு வழி இருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
முயன்று பாருங்கள்.
- சுரேஷ் கோபி