டெக் ஷார்ட்கட்ஸ் - அலைப்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

டெக் ஷார்ட்கட்ஸ் - அலைப்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?
Updated on
2 min read

- ரா. மனோஜ்

ஒரு காலத்தில் கையால் எழுதிக் கொண்டிருந்தோம். இணைய வளர்ச்சிக்குப் பிறகு தட்டச்சு முறையில் (Keypad Method) டைப் செய்கிறோம். அதிலும் இப்போது கூடுதல் வசதியாகக் குரல் வழி ஒலியச்சு (Voice Typing) முறையில் பேசியே எழுத்து வடிவில் கொண்டுவந்து விடுகிறோம். அது மட்டுமில்லாமல் Glide typing முறையிலும் வேகமாக டைப் செய்யும் வசதியும் வந்துவிட்டது.

ஆனாலும் சிலருக்குக் கைப்பட எழுதினால்தான் மனநிறைவு கிடைக்கும்.இப்படிப்பட்டவர்களுக்கு ப்ளேஸ்டோரில் Gboard-the Google Keyboard என்கிற செயலி இலவசமாகக் கிடைக்கிறது.

இதனைத் தரவிறக்கம் செய்வதன் மூலம், பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என்று எந்த வகையான செயலியிலும் நாம் நினைத்ததை நம்முடைய மொழியில் கையால் எழுத முடியும். இந்தச் செயலியைப் பயன்படுத்தும் முறைகள்:

  • பிளேஸ்டோரில் google input handwriting என்கிற செயலியைத் தரவிறக்கம் செய்யுங்கள்
  • ஏதேனும் ஒரு செயலியைத் திறந்து (உதாரணத்துக்கு வாட்ஸப்) படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் பட்டனை Long press செய்யுங்கள்.
  • பின்னர் செட்டிங்ஸில் Languages என்கிற Optionஐ தேர்வுசெய்ய வேண்டும்.
  • இதில் Your keyboard languages and layouts என்கிற தேர்வில் நமக்குத் தேவையான மொழியைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். தமிழுக்கு abc-தமிழ் என்பதனைத் தேர்வு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • இதில் Handwriting என்கிற தேர்வை (Checkbox) டிக் செய்து கொள்ளவேண்டும். Multilingual typing என்பதனை enable செய்துகொள்ள வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு Done என்கிற பட்டனை அழுத்தி வெளியேற வேண்டும்.
  • படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள பட்டனை Long press செய்தபின் மேலே உள்ள தேர்வுகள் நமக்குக் கிடைக்கும். அதில் தமிழ்-இந்தியா என்கிற பட்டனைத் தேர்வுசெய்ய வேண்டும்.
  • இப்போது வருகிற திரையில் ‘இங்கே விரலால் எழுதுங்கள்’ என்கிற இடத்தில் நாம் விரலாலோ, Stylus pen உதவியுடனோ எழுதத் தொடங்கலாம்.

இதில் நாம் சேர்த்து எழுதினாலும், ஒன்றின்மேல் ஒன்றாக எழுதினாலும் வேகமாக எழுதினாலும் சரியான முறையில் இந்தச் செயலி எழுத்துருக்களாக மாற்றம் செய்து தந்துவிடுகிறது.

- ரா. மனோஜ், கட்டுரையாளர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in