

இந்தக் காலத்தில் பதின் பருவப் பிள்ளைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது எது? இந்தக் கேள்வியைப் பெற்றோர்களிடம் கேட்டால், ‘ஸ்மார்ட் போன்’ என்று சட்டெனப் பதில் வரும். இது உண்மைதான். மணிக்கணக்கிலும் நள்ளிரவைத் தாண்டியும் மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கும் பதின் பருவப் பிள்ளைகளைப் பார்த்துப் பெற்றோர் பதறித்தான் போகிறார்கள். பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து அச்சப்படும் அளவுக்கும் இன்று உள்ளங்கையிலேயே ஆபத்தைக் கட்டிக்கொண்டு திரிகிறார்கள் பதின் பருவத்தினர். இந்தச் சூழலில் பதின் பருவத்தினரின் மிதமிஞ்சிய ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து இங்கிலாந்தில் வெளியான ஓர் ஆய்வு முடிவு, பதின் பருவத்தினரின் உலகைப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. அதன் புள்ளி விவரங்களைப் பார்ப்போமா?
‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription