

பேருந்திலோ, ரயிலிலோ நமது அருகில் இருக்கும் இளைய தலைமுறையினர் தங்களது மொபைலில் வேகமாக டெக்ஸ்ட் செய்வதைப் பார்த்திருப்போம். அந்த வேகம் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அது ஒன்றும் அவ்வளவு சவாலான செயல் அல்ல. நம்மாலும் அதே போன்று வேகமாக டைப் செய்ய முடியும். வேகமாக டைப் செய்வதற்கு உதவும் வகையில் பல ஷார்ட் கட்ஸ் உண்டு. அவற்றில் கூகுள் கீபோர்டில் உள்ள ஆப்ஷனல் ஷார்ட் கட்ஸ் முக்கியமானது. நம் மொபைலில் இரண்டு மூன்று வரி வாக்கியத்தை டைப் செய்ய சில நிமிடங்கள் பிடிக்கும். ஆனால், கூகுள் கீபோர்டில் உள்ள ஆப்ஷனல் ஷார்ட் கட் மூலம் இதைச் சில வினாடிகளில் டைப் செய்துவிட முடியும். அதை அடையும் வழிமுறைகள்:
1. முதலில் உங்கள் மொபைலில் உள்ள கீபோர்டை ஜி போர்டு (G Board) என்னும் கூகுள் டைப் கீபோர்டுக்கு மாற்றுங்கள்.
2. கூகுள் கீபோர்டு செட்டிங்கிஸில் சென்று டிக்ஷனரியை செலக்ட் செய்யுங்கள்.
3. அதில் பர்சனல் டிக்ஷனரியை செலக்ட் செய்து, இங்கிலீஷை செலக்ட் செய்யுங்கள்.
4. இடது மேல் புறம் உள்ள கூட்டல் குறியீட்டை கிளிக் செய்தவுடன், Type a Word என்றும் Optional Shortcut என்றும் இரு தேர்வுகள் இருக்கும்.
5. Type a Word-ல் நீண்ட வாக்கியமாக உள்ள வார்த்தைகளை (உதாரணத்துக்கு உங்கள் வீட்டு முகவரியை) டைப் செய்யுங்கள்.
6. Optional Shortcut-ல் மேலே குறிப்பிட்ட நீண்ட வாக்கியத்தின் சுருக்கமாக ஓரிரு எழுத்தாக (ADS) டைப் செய்து கீழே உள்ள டிக் பட்டனை செலக்ட் செய்துவிட்டு Back வந்து பார்த்தால் நீங்கள் உருவாக்கிய ஷார்ட்கட் உங்களுக்குத் தெரியும்.
7. கூகுள் கீபோர்டில் ADS என்று டைப் செய்யும்போது முழு முகவரியும் கீழே தெரியும். பின் அதை கிளிக் செய்தால் முகவரி முழுவதுமாக வந்துவிடும்.
நொடிப் பொழுதில் முழு முகவரியையும் இந்த ஷார்ட்கட் மூலம் டைப் செய்து அசத்துங்கள்!
- சுரேஷ் கோபி, கட்டுரையாளர், வடிவமைப்பாளர்
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription