

‘டி20' உலகக் கோப்பையில் இந்தியா தோற்றாலும் தோற்றது, 'மீம்' கிரியேட்டர்களுக்குத் தற்போது எம்.எஸ்.தோனிதான்... மணற்கேணிதான்!
இதைப் பார்த்துக் கலங்கிய தோனி ரசிகர் ஒருவர், தனது முகநூலில் ஒரு லிங்க்கை ஷேர் செய்திருந்தார். கடந்த சில நாட்களாக இணையத்தில் அதுதான் வைரல்.
தோனி குறித்து இதர கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என்ன கூறினார்கள் என்பதையெல்லாம் சேகரித்து கடந்த ஆண்டு ஒரு போட்டோ ஆல்பம் செய்திருந்தார் வலேரியன் மெனிசெஸ் என்ற தோனி ரசிகர். அந்த லிங்க்கைத்தான், தற்போது 'தோனி மீம்'களுக்கு எதிராக அந்த இன்னொரு தோனி ரசிகர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்த ஆல்பத்தைப் பார்க்கிறபோது தோனி மீது மரியாதை கூடுகிறது. அட விடுங்கப்பா... ஆஃப்டர் ஆல், வீ ஹேட் எ குட் இன்னிங்ஸ். இல்லையா..?
அந்த ஆல்பத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்: - >http://bit.ly/23nFkBG