காகித உலக சாம்பியன்கள்!

காகித உலக சாம்பியன்கள்!
Updated on
1 min read

பள்ளி, கல்லூரிகளில் காகிதத்தில் ராக்கெட் செய்து, அதைப் பறக்கவிட்டு விளையாடிய அனுபவம் பலருக்கும் இருக்கும். அந்தப் பாணியிலான விளையாட்டை ‘பேப்பர் விங்ஸ்’ என்கிறார்கள். சென்னை எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் அண்மையில் 2022-ம் ஆண்டுக்கான ரெட் புல் பேப்பர் விங்ஸ் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் 9 நகரங்களிலிருந்து இந்தப் போட்டியில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். நீண்ட தூரம், மிக நீண்ட ஏர் டைம் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் டெல்லியைச் சேர்ந்த ஆயுஷ் மண்டாவத் நீண்ட தூரப் பிரிவில் வெற்றி பெற்றார். ஏர்டைம் பிரிவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தீபக் சவுத்ரி வெற்றி பெற்றார்.

இதேபோல சென்னை நகருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேர ஏர்டைம் பிரிவுகளில் ஆர்யன் வாட்ஸ் மற்றும் ஞானசம்பந்தம் ஆகியோர் வெற்றி பெற்றனர். மிக நீண்ட தூரம், நீண்ட நேர ஏர்டைம் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் வெற்றிபெற்ற தேசிய அளவிலான வெற்றியாளர்கள் மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஆஸ்திரியாவில் நடைபெற உள்ள ‘ஹாங்கர்-7’ போட்டியில் பங்கேற்க உள்ளனர். அங்கு நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுபவர்கள் உலக சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in