ஓர் அறிவுப் பெட்டகம்

ஓர் அறிவுப் பெட்டகம்
Updated on
1 min read

‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு’ என்கிற பாவேந்தரின் வரிகளுக்கு வடிவம் தந்துள்ளது, ‘இந்து தமிழ் இயர்புக் 2022’.
அரசு, அரசு சார்பான நிறுவனங்களின் பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஒன்றிய, மாநில அரசுகளின் எந்தப் போட்டித் தேர்வாக இருந்தாலும் அதில் பொது அறிவுப் (General Knowledge) பகுதி மிக முக்கியமானது. பொது அறிவுப் பகுதிக்கான பாடத்திட்டம் மிக விரிவானது. பல்வேறு தகவல்களைத் திரட்டி அவற்றை முறையாக அறிந்தும், நிரல்பட நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதும் தேர்வு நோக்கில் மிகவும் அவசியம். அந்த வகையில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், எழுத விழையும் மாணவர்களுக்கும் பல்வேறு தகவல்கள் ஒருங்கே தொகுக்கப்பட்டு ‘இந்து தமிழ் திசை இயர்புக் 2022’ அறிவுப்பெட்டகமாக வெளிவந்துள்ளது.
2021-ம் ஆண்டில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் உலகம், இந்தியா, தமிழ்நாடு எனச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் நடைபெற்ற புவியியல், காலநிலை, சுற்றுச்சூழல் சார்ந்த மாற்றங்கள், புதிய நிகழ்வுகள் ஆகியவற்றை எளிய தமிழில் அழகுறத் தந்திருப்பது வாசிப்பு சார்ந்த விருப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்திய மாநிலங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைச் சிறப்பாகத் தொகுத்திருப்பது போட்டித் தேர்வு கடைசி நேரத் திருப்புதல்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு முக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் ஒருங்கே அமைந்திருப்பதும் சிறப்பு.
இந்திய விடுதலைப் போராட்டம் 75-ம் ஆண்டை முன்னிட்டுத் தொகுக்கப்பட்டுள்ள அரிய தகவல்கள், நடப்பு நிகழ்வுகள் தேர்வுத் தயாரிப்பில் பெரிதும் உறுதுணையாக இருக்கும். ஆளுமைகள், அஞ்சலிகள், அறிவியல் தொழில்நுட்பச் செய்திகள் என விரியும் இந்த நூலைப் போட்டித்தேர்வு ஆர்வலர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.
இயக்குநர், செய்தி
மக்கள் தொடர்புத் துறை
தமிழ்நாடு அரசு

‘இந்து தமிழ் இயர்புக் 2022’ இல்
பல பயனுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
800 பக்கங்கள், விலை ரூ. 275.
ஆன்லைனில் பதிவு செய்ய:
store.hindutamil.in/publications
புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற:
‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில்
DD, Money Order, Cheque
அனுப்ப வேண்டிய முகவரி:
இந்து தமிழ் இயர் புக் 2022, இந்து தமிழ் திசை,
124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
தொடர்புக்கு: 74012 96562 / 74013 29402

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in