Last Updated : 18 Jan, 2022 11:27 AM

 

Published : 18 Jan 2022 11:27 AM
Last Updated : 18 Jan 2022 11:27 AM

அதிரவைத்த கிங் கோலி!

சென்ற அக்டோபர் மாதம் வரை டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்தியாவின் கேப்டனாக இருந்த விராட் கோலி, இப்போது கேப்டன் பொறுப்பிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார். ஏழு ஆண்டுகள் டெஸ்ட் கேப்டன், ஐந்து ஆண்டுகள் ஒரு நாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார் கோலி. ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்கிற சிறு குறையைத் தவிர, இந்திய கேப்டன்களிலேயே வெற்றிக்கரமான கேப்டன் என்று பெயரெடுத்தவர் விராட் கோலி. கேப்டனாக அவருடைய சாதனைகள் என்ன?

டெஸ்ட்

l இந்திய கேப்டன்களிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு (68) கேப்டனாக இருந்தவர் கோலி. அதற்கு முன்பு எம்.எஸ். தோனி (60)

l இந்திய கேப்டன்களிலேயே அதிக டெஸ்ட் போட்டி (40) வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தவர். அடுத்து எம்.எஸ். தோனி (27).

l இந்தியாவில் கோலி தலைமையில் இந்தியா பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை 24. எம்.எஸ். தோனி 21.

l டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அடித்த இரட்டைச் சதங்களின் எண்ணிக்கை ஏழு. இந்த ஏழுமே கேப்டனாக இருந்த போது அவர் அடித்தவை.

l உலகில் 40 டெஸ்ட் வெற்றிகளை ஈட்டிய நான்காவது கேப்டன் கோலி. கிரீம் ஸ்மித் (53), ரிக்கி பாண்டிங் (48), ஸ்டீவ் வாக் (41)

l இந்திய கேப்டன்களிலேயே அதிக டெஸ்ட் ரன்களைக் குவித்தவர் (5864) விராட் கோலிதான்.

ஒரு நாள்

l எம்.எஸ். தோனி (110), முகம்மது அசாருதீன் (90), சவுரவ் கங்குலி (76) ஆகியோருக்கு அடுத்தப்படியாக அதிக வெற்றிகளைப் பெற்ற நான்காவது கேப்டன் கோலி (65).

l எம்.எஸ். தோனிக்கு அடுத்து கேப்டனாக 5449 ரன்கள் குவித்த இரண்டாவது இந்திய கேப்டன் கோலி. முதலிடத்தில் தோனி (6641).

l இந்திய கேப்டனாக அதிக சதங்களை (21) விளாசியவர் கோலி மட்டுமே. உலக அளவில் ரிக்கி பாண்டிங்குக்கு (22 சதங்கள்) அடுத்த இடம் இவருக்குத்தான்.

டி20

l ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் (1570 ரன்கள்) நான்காம் இடத்தில் உள்ளார் கோலி.

l ‘SENA’ நாடுகள் என்றழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2-1 (2018); இங்கிலாந்துக்கு எதிராக 2-1 (2018); நியூசிலாந்துக்கு எதிராக 5-0 (2020); ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 (2020) என டி20 தொடர்களை வென்ற இந்திய கேப்டன் கோலி.

l எம்.எஸ். தோனிக்கு (42 வெற்றி) அடுத்தபடியாக அதிக வெற்றிகளை இந்தியாவுக்காக ஈட்டியவர் கோலி (30 வெற்றி). உலக அளவில் அஸ்கர் ஆப்கன், எம்.எஸ்.தோனி, இயான் மோர்கன் ஆகியோருக்கு அடுத்த இடம் கோலிக்கு.

l 30 இன்னிங்ஸ்களில் விரைவாக ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் கேப்டன் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x