

‘என்னடா இது... எல்லாருக்கும் ஒரு துணை இருக்கு. நமக்கு மட்டும் தனிமை மட்டும்தான் துணையா இருக்கு' என்று சோகமாக கவிதை வடிக்கும் ‘சிங்கிள்' சித்தரா நீங்கள்?
நோ மோர் வொர்ரீஸ். உங்களுக்காகவே இருக்கு ‘சிங்கிள்ஸ் டே!'
‘சிங்கிள்ஸ் டே' என்பது ‘ஆன்டி-வாலண்டைன்ஸ் டே' என்ற பெயரில் 1990-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முதன்முதலில் கொண்டாடிய பெருமைக்குரிய ‘தனியர்கள்' சீனாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள். அவர்கள் தொடங்கி வைத்த இந்த உற்சவம் இன்று உலகம் முழுவதிலும் உள்ள ‘சிங்கிள்' சிங்கங்களால் உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது.
இந்த தினம் சீனாவில் உருவாவதற்கான முக்கியக் காரணம் அங்கு உள்ள ‘ஜெண்டர் இம்பேலன்ஸ்’. பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம். அதான்! அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? உலகம் முழுக்க சீனர்களுக்கு ஆதரவு தரும் விதமாக மற்ற நாடுகளிலும் இந்த தினம் மிகப் பெரிய ‘ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா’வாகவும் கொண்டாடப்படுகிறது.
பலரும் தனக்கு விருப்பமான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தனக்குத் தானே பரிசு வாங்கிக் கொண்டு இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இதனால் 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ‘பிளாக் ஃப்ரைடே', ‘தாங்க்ஸ் கிவ்விங் டே' போன்ற தினங்களின் பரிசுப் பொருள் விற்பனை ‘ரெக்கார்ட் பிரேக்!' ஆனது.
ஸோ... ‘ஆஹா... நமக்கு ஒரு தினமா?' என்று கனவில் உருக ஆரம்பித்துவிட்டீர்களா? ஆனால் அதற்கு நீங்கள் நவம்பர் 11-ம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும்!
‘ஸ்வீட் ட்ராஜெடி'தான் இல்லையா?