

புத்தகங்களை ஒலி வடிவில் கேட்கலாம். அதற்கு ஆடியோ புத்தகங்கள் என்று பெயர். அதே போல கட்டுரைகளையும் ஒலி வடிவில் கேட்கலாம். இத்தகைய ஆடியோ கட்டுரைகளை ‘நரேட்டெட்.ஆர்க்' இணையதளம் பட்டியலிடுகிறது. ‘பாட்காஸ்டிங்' என்று சொல்லப்படும் வடிவிலான ஒலிப்பதிவுகளைத் தேடி எடுத்து அவற்றின் வகைக்கேற்ப இந்தத் தளம் பட்டியலிட்டுப் பரிந்துரைக்கிறது. ஒலிக் கட்டுரைகளின் பதிவுகளைத் தேடும் வசதியும் இருக்கிறது. ஒலிக் கட்டுரைகளை இதில் பதிவேற்றும் வசதியும் இருக்கிறது. வரி வடிவம் ஆதிக்கம் செலுத்தும் இணையத்தில் இது மற்றுமொரு புதுமையான சேவை.
இணையதள முகவரி: >http://www.narrated.org/