வைரல் உலா: ஒரே செயல்; ஓஹோன்னு புகழ்!

வைரல் உலா: ஒரே செயல்; ஓஹோன்னு புகழ்!
Updated on
1 min read

உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு, கால்பந்தாட்டம். இதனால் இதன் ஆட்டக்காரர்கள் பலரும் உலகப் பிரபலம். அவர்களுள் போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஒருவர். கால்பந்து விளையாட்டே தெரியாதவர்களும் அறிந்துவைத்திருக்கும் பெயர்.

சென்ற வாரம் சமூக ஊடகங்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர். ஐரோப்பியக் கால்பந்து போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேசையில் இருந்த குளிர்பானத்தின் இரு பாட்டில்களை அகற்றிவிட்டு, அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து காட்டி, ‘தண்ணீர் குடியுங்கள்’ எனச் சொன்னார். இது சமூக ஊடகங்களில் டிரெண்டானது. இதனால், குளிர்பான நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் உலகக் குளிர்பானச் சந்தையை ஆட்டம் காண வைத்துவிட்டது இந்தச் சம்பவம். ரொனால்டோ குடிப் பழக்கம் இல்லாதவர். ரொனால்டாவின் தந்தை குடிப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர். அதனால், மதுவை ஊக்குவிக்காதவர், இப்போது குளிர்பானத்துக்கு எதிராகவும் தன் எதிர்ப்பை அவர் பதிவுசெய்துள்ளர் என்று சமூக ஊடகங்களில் கொண்டாடுகிறார்கள்.

ரொனால்டோவைத் தொடர்ந்து பிரெஞ்சு கால்பந்து வீரர் பால் போக்பா, மற்றொரு விளம்பரதாரரான ஹெனெகென் பீர் பாட்டிலைப் பத்திரிகையாளர் சந்திப்பில் மேஜையிலிருந்து அகற்றினார். இதுவும் உலக அளவில் டிரெண்ட் ஆனது. இந்த இரு சம்பவங்களும் ஐரோப்பியக் கால்பந்து போட்டியைவிடப் பிரபலம் ஆயின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in