பாப்கார்ன்: யூடியூபில் புதிய அப்டேட்

பாப்கார்ன்: யூடியூபில் புதிய அப்டேட்
Updated on
1 min read

யூடியூப் நிறுவனம் ‘அப்டேட்’ ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. யூடியூபர்களுக்காகவே இந்த ‘அப்டேட்’. அதாவது, யூடியூபர்கள் தங்கள் கூகுள் கணக்கு விவரங்களைப் பாதிக்காமல் அலைவரிசையின் பெயரையும் அடிப்படை விவரங்களையும் மாற்றிக்கொள்ளும் வசதியை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு அலைவரிசையின் பெயரில் செய்யும் மாற்றங்கள், கூகுள் சேவையான ஜிமெயிலில் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. புதிய ‘அப்டேட்’ மூலம் அலைவரிசையின் பெயருக்குப் பதில் தங்கள் உண்மையான பெயரில் மின்னஞ்சல்களை அனுப்ப வழி ஏற்பட்டிருக்கிறது.

ஒலிம்பிக் தங்கம் எதிர்பார்ப்பு

டோக்கியோ ஒலிம்பிக் நெருங்கிவரும் வேளையில், போலந்தில் சர்வதேச ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தத் தொடர் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் உக்ரைனின் கிறிஸ்டினா பெரேசாவை வீழ்த்தித் தங்கம் வென்றார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தங்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in