

கூகுள் தனது தேடுபொறியின் லோகோவை செப்டம்பர் 1 அன்று ஆறாம் முறையாக மாற்றியுள்ளது. சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த லோகோவை கூகுள் மாற்றியிருக்கிறது.
பழைய லோகோவில் ஷெரிஃப் வகை எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போதைய லோகோவில் புரொடக்ட் சான்ஸ் என்னும் எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வழக்கம்போல் நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இறுதி எழுத்தான ‘இ’ முன்பு போலவே சற்று சாய்ந்துள்ளது. கூகுளின் புதிய தோற்றம் புத்துணர்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது.
அது மட்டுமல்ல கூகுள் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்பதை விளக்கும் வீடியோவை யூடியூபில் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.
அதன் முகவரி: https://goo.gl/ZSnQK4