

டி.கே.
கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க நேரிட்டதால் பலருக்கும் எழுதுவதில் ஆர்வம் பிறந்திருக்கும். இப்படிப் புதிதாக எழுதவருபவர்களுக்கு வழிகாட்ட அனுபவசாலிகள் இல்லையே என்று அலுத்துக்கொள்ள வேண்டாம். ‘ரைட்டிங் ஸ்பார்க்ஸ்’ என்ற இணையதளம், அந்தக் குறையைப் போக்குகிறது. எழுத்துத் துறைக்கு புதிதாக வருவோரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த இணையதளம் வழிகாட்டுகிறது.
எழுத்தார்வம் மிக்க மாணவர்கள் இந்தத் தளத்துக்குச் சென்று, மாணவர்களுக்கான எழுதும் பகுதியைத் தேர்வுசெய்ய வேண்டும். அதன் பிறகு கதை, செய்தி, கவிதை, கருத்து ஆகிய நான்கு பிரிவுகள் அதில் தோன்றும். அவற்றில் எந்தப் பகுதி சார்ந்து உங்களுக்கு விருப்பமோ, அதை ‘கிளிக்’ செய்து எழுதத் தொடங்கிவிடலாம்.
கதை என்றால் அதற்கான பகுதி தோன்றும். அதில் தலைப்பை டைப் செய்துவிட்டு தொடர்ந்து எழுதத் தொடங்கிவிடலாம். அதன் அருகிலேயே செய்தியை உருவாக்குவதற்கான குறிப்புகளையும்கூட நீங்கள் எழுதிக்கொள்ளலாம். இதேபோல் கவிதை, கதைகளையும் எழுதிப் பழகலாம். இந்த இணையதளத்தில் மாணவர்கள் எழுதுவதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டுவதற்கான பகுதியும்கூட உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள: https://writingsparks.com