வைரஸ் உலா: பெயரை மாற்றினால் மட்டும் போதுமா?

வைரஸ் உலா: பெயரை மாற்றினால் மட்டும் போதுமா?

Published on

யாழினி

‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கம் உலகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். நிறத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பாகுப்படுத்துவது பெரும் குற்றம் என்ற கருத்து பெரும்பாலானோரிடம் வலுப்பெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஏற்கெனவே விவாதத்தில் இருந்துவந்த ‘ஃபேர்னெஸ் கிரீம்’களின் பயன்பாடு மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

‘ஷாதி.காம்’ என்ற திருமண வலைத்தளம் பயன்படுத்திவந்த முகத்தின் நிறத்தை மாற்றும் ‘ஃபில்டருக்கு’ பயனாளிகள் மத்தியில் எதிர்ப்பு உருவானது. இதுதொடர்பான விவாதமும் சமூக ஊடகங்களில் நிகழ்ந்ததால், உடனடியாக அந்த ஃபில்டரை நீக்குவதாக ஷாதி.காம் அறிவித்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ‘இந்துஸ்தான் யுனிலிவர் லிமிட்டட்’ ‘ஃபேர் அண்ட் லவ்லி’ ‘ஃபேர்னெஸ் கிரீமி’ன் பெயரில் இருக்கும் ‘ஃபேர்’ (Fair) என்ற சொல்லை நீக்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன், ‘ஒயிட்னிங்’, ‘லைட்னிங்’ போன்ற சொற்களையும் நீக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’, ஆசியாவில் விற்பனை செய்யும் ‘ஃபேர்னெஸ்’ பொருட்களைத் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

‘ஃபேர் அண்ட் லவ்லி’ பெயர் மாற்றத்தை நெட்டிசன்ஸ் சிலர் வரவேற்றிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான நெட்டிசன்ஸ் பெயரை மாற்றிவிட்டால் மட்டும் போதுமா என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளனர். அண்மையில், சமூக ஊடகங்களில், முக்கிய டிரெண்டாக இந்த ‘ஃபேர்னெஸ் கிரீம்’ விவாதம் இடம்பெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in