

மிது
பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வாங்கினால் என்ன செய்வோம்? பொருட்களை எடுத்து வைத்துவிட்டு பிளாஸ்டிக் பையைத் தூக்கி எறிந்துவிடுவோம் அல்லது குப்பையில் போட்டுவிடுவோம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துவரும் ரோஸா ஃபெரினோ, பிளாஸ்டிக் பைகளைத் தூக்கி எறிவதில்லை.
பிளாஸ்டிக் பைகளை பெட்டியில் சேகரித்துவைப்பார். அப்படிச் சேரும் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு கோட்சூட் ஒன்றை உருவாக்கி அசத்தியிருக்கிறார் ஃபெரினோ. பிளாஸ்டிக் பையில் கோட் தயாரிக்கும் இந்த யோசனை அவருக்கு எப்படி வந்தது?
வீட்டில் இருக்கும்போது ஃபெரினோவுக்கு டி.வி. பார்க்கப் பிடிக்காதாம். என்றாலும் நேரம் போக வேண்டும் அல்லவா? அதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்திருக்கிறது. அந்த எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுத்ததால் உருவானதுதான் பிளாஸ்டிக் கோட்சூட். முதலில் தனக்கு ஏற்றவாரு கோட்டை உருவாக்கி அழகு பார்த்திருக்கிறார் ஃபெரினோ.
அவருடைய இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைக்கவே, இப்போது ‘பாலித்தீன் சூட்’ என்ற பெயரில் பெரிய கடைகளுக்கு முன்னால் கோட்சூட்டை வைக்கும் அளவுக்கு பிரலமாகிவிட்டது.
அண்மையில் பிளாஸ்டிக் சூட் தயாரிப்பதை படம் எடுத்து இணையத்தில் ஃபெரினோ பதிவிட, அந்த ஒளிப்படங்கள் வைரலாகிவிட்டன.