

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபரில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பலூன் திருவிழா அண்மையில் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் நடைபெற்று முடிந்தது. ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
ஆல்புகெர்க்கி நகரில் நடைபெற்ற இந்த விழாவில் கார்ட்டூன் கதாபாத்திரங்களிலான பலூன்கள், காதல் சின்னமான இதய வடிவ பலூன்கள், விலங்கு உருவ பலூன்கள், விதவிதமான வண்ண பலூன்கள் என ஏராளமான பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்த பலூன்கள் காற்றில் ஒரு சேர பறந்து சென்ற காட்சி பார்வையாளர்களுக்குப் பரவசத்தைக் கொடுத்தது.