Published : 29 Oct 2019 02:57 PM
Last Updated : 29 Oct 2019 02:57 PM

உங்களுக்கு இந்த அறிகுறியெல்லாம் இருக்கா..?

கிருத்திக்

மழைக்காலம் வந்துட்டாலே சளி, காய்ச்சல், இருமல், தலைவலி மாதிரியான வியாதிகள் படையெடுக்கிற மாதிரி, நம்ம பசங்களுக்கும் சில ‘அரிய’ வியாதிங்க வரத்தான் செய்யுது. ஆனா, “நாம ஏன் இப்படி நடந்துக்குறோம்”னு அவங்களுக்கே வௌங்காது... ஏன்னா இது வாலிப வயசு. பெருசுக புரிஞ்சு நடந்துக்கிடட்டும் என்று பொதுநலன் கருதி இந்த மருத்துவக் (?!) கட்டுரையை வெளியிடுறோம். (விஜய்ண்ணா, எடப்பாடியாருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தவங்க நமக்கும் ஒண்ணு தந்தா வேணாமின்னா சொல்லப் போறோம்?)

புத்தகத்தைக் கட்டிக்கோ

மழைக்காலம் வந்துட்டாலே சளி, காய்ச்சல், இருமல், தலைவலி மாதிரியான வியாதிகள் படையெடுக்கிற மாதிரி, நம்ம பசங்களுக்கும் சில ‘அரிய’ வியாதிங்க வரத்தான் செய்யுது. ஆனா, “நாம ஏன் இப்படி நடந்துக்குறோம்”னு அவங்களுக்கே வௌங்காது... ஏன்னா இது வாலிப வயசு. பெருசுக புரிஞ்சு நடந்துக்கிடட்டும் என்று பொதுநலன் கருதி இந்த மருத்துவக் (?!) கட்டுரையை வெளியிடுறோம். (விஜய்ண்ணா, எடப்பாடியாருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தவங்க நமக்கும் ஒண்ணு தந்தா வேணாமின்னா சொல்லப் போறோம்?)

அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இந்த வியாதி அதிகமாகத் தாக்குவது இளசுகளைத்தான். அம்மா, அப்பா சொல்லிவிட்ட பல வேலைகளை வழியிலேயே மறந்துவிடுவார்கள். “அங்கிருந்து ஒரு போனாவது போட்டிருக்கலாம்ல” என்று கேட்டால், “தோணல” என்பார்கள். படிச்சதெல்லாம் பரீட்சையில மறந்து போயிருக்கும். பிள்ளைக்கு கஜினி சூர்யாவுக்கு வந்த அபூர்வ வியாதி வந்துவிட்டதாக நினைத்துப் பெற்றோர்கள் பதறுவார்கள்.

டாக்டரிடம் கூட்டிக்கிட்டுப் போய் மெமரிபிளஸ் மாத்திரை வாங்கி காசையும் விரயமாக்குவார்கள். “எனக்கு இன்ட்ரஸ்ட்டான விஷயம் எதையும் நான் மறக்கிறதில்லை. எனக்குப் பிடிக்காத, தேவையில்லாத, முக்கியம்னு தோணாததைத்தான் மறக்குறேன்” என்று எடுத்துச் சொல்லணும். “என்னைக்காவது என் பெர்த்டே, அப்பாவோட சம்பள தேதி, கேர்ள் பிரெண்டோட செல்போன் நம்பர், ப்ரோ கபடி, ஐபில் கிரிக்கெட் டைம் டேபிளை மறந்திருக்கேனா?” என்று கேட்டு இத்தனை நாளாக மூடிக்கிடந்த பெற்றோர்களின் ஞானக்கண்ணைத் திறக்க வேண்டும்.

ஆங்கிரி பேர்ட் அட்டாக்

வழக்கமாய்ப் பார்க்கிற பையன் பார்க்கவில்லை என்றாலோ, நல்லாப் பேசிய பொண்ணு பேசவில்லை என்றாலோ நம்ம புள்ளிங்கோவுக்குக் கெட்ட கோபம் வரும். ஆனா, இதான் என் கோபத்துக்குக் காரணம் என்று சொல்ல முடியாமல் தவிப்பார்கள். அப்பப்போ, “ஏன்டா மூஞ்சிய இப்டி வெச்சிருக்க?” என்று பையனைப் பிறாண்ட வேண்டாம். இன்னொரு விஷயம், பெற்றோர்கள் மானக்கேடாய்த் தன் பிள்ளைகளைத் திட்டும்போதுகூட ‘பாட்ஷா’ ரஜினி மாதிரி அவர்கள் பொறுத்துக்கொள்ளவே செய்கிறார்கள். ஆனால், பக்கத்து வீட்டுப் பொண்ணோடோ, உறவுப் பையனோடோ ஒப்பிடும்போது கோபத்தில் தன்னிலை இழக்கிறார்கள். ஆகவே, பெரியோர்களே... தாய்மார்களே... உங்களாள பாராட்ட முடியாட்டியும் பரவால்ல. தயவுசெஞ்சு ஒப்பிடா தீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க.

காது கேளாமை

காலையில குடும்பமே சுத்தி கத்திக் கூப்பாடு போட்டாலும், ‘அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்...’ போல தூக்கத்தைத் தொடருவாங்க. கடைக்குப் போகச் சொல்ற அம்மாவின் பேச்சும் கேட்காது. அப்பா சொல்கிற அறிவுரைகள் காதுல ஏறாது. தாத்தா பாட்டி என்றொரு ஜீவன் வீட்டில் இருப்பதாகவே ஞாபகம் வராது. ஆனால், ஃபிரண்ட் டெக்ஸ்ட் பண்ணுவதும், கேர்ள் பிரண்ட் முணுமுணுப்பதும்கூடத் தெளிவாய்க் கேட்டுத் தொலைக்கும். இது வியாதியல்ல என்றும், எதிர்காலத்துல பொண்டாட்டியின் தொணதொணப்பை எல்லாம் ‘டாலரேட்’ பண்ணுவதற்காக இயற்கை தருகிற பயிற்சிதான் என்று இங்கர்சால் (இங்கர் சாலா, இடிஅமீனா?) யுனிவர்சிட்டியின் ஆய்வுக்கட்டுரை ஒன்று சொல்கிறது.

சின்னப்பிள்ளைத்தனம்

இந்த நோய் குறிப்பாக ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணாக இருக்கிற பிள்ளைகளைத் தாக்குகிறது. குழைஞ்சு குழைஞ்சு பேசுறது, ஏதாவது வாங்கித் தர மாட்டேன் என்று அம்மாவோ, அப்பாவோ சொன்னால் கண்ணீர் விடுவது, சாப்பிடாமல் படுத்துக்கொள்வது போன்றவை இந்த வியாதியின் அறிகுறிகள். கூட்ட நாட்டமான இடத்துல கூச்ச சுவாபம் கொண்டவர்களாகவும், வீட்டில் தனியே பேசிச் சிரிப்பவர்களாவும் இருப்பார்கள். அதுவும் அந்த ஒத்தப்பிள்ளையும் பெண்ணாக இருந்துவிட்டால், அப்பாக்கள் பாவம். இவர்களை அடக்க ஒரே வழி, செமஸ்டர் லீவில் நிறைய பிள்ளைகள் இருக்கிற சொந்தக்காரர்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவதுதான்.

செல்போன் மேனியா

இளைஞன், இளைஞிகளை அதிகமா தாக்குற நோய் இதுதான்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது. (அது எந்தப் புள்ளிவிவரம்னு கேட்கிறவன் ரத்தம் கக்கிச் சாவான்). ‘அசுரன்’ படத்துல மஞ்சு வாரியார் ஆளே இல்லாத வாசலை எட்டி எட்டிப் பார்க்கிற மாதிரி அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்த்துக்கிட்டே இருக்கிறதுதான் இந்த வியாதிக்கான முதல் அறிகுறி. மணிக்கு ஒருதடவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் செக் பண்றது, பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பார்க்கிறது எல்லாம் இந்த வியாதியின் அறிகுறிதான். பைக் ஓட்டிக்கிட்டு போகும்போதே ஒத்தக்கையில போனை எடுத்து நோண்ட ஆரம்பிச்சிட்டா, வியாதி முத்திடுச்சின்னு அர்த்தம். இன்னும் சில பேருக்கு ‘டிக்டாக்’ வீடியோ பார்க்காலன்னா கை நடுங்க ஆரம்பிச்சிடும்.

விருந்தாளி போவியா... ச்சீ போபியா...

வீட்டுக்கு வர்ற விருந்தாளி களையும், பெரியங்களையும் மதிக்கவே மாட்டாங்க. பெரியவங்களே இறங்கிவந்து பேசுனாலும், “ம்...”, “சரி...” என்று ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதில் வரும். இதுக்கு உண்மையான காரணம், “இந்தப் பெருசுங்ககிட்ட முகம் கொடுத்துப் பேசுனா அறிவுரையை அள்ளித் தெளிக்க ஆரம்பிச்சிடும்” என்பதுதானே ஒழிய, வேறில்லை. எனவே, பெரியவர்கள் தங்களைவிடச் சின்னவர்களிடம் பேசும்போது சுருக்கமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். முடிஞ்சா அறிவுரை சொல்ற பழக்கத்தையே நிப்பாட்டுங்க. “பிகில் படம் வழக்கம்போல சுட்ட கதையாம்ல” என்று ட்ரென்டியாகப் பேச முயலுங்கள்.

செலக்டிவ் அம்னீசியா

அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இந்த வியாதி அதிகமாகத் தாக்குவது இளசுகளைத்தான். அம்மா, அப்பா சொல்லிவிட்ட பல வேலைகளை வழியிலேயே மறந்துவிடுவார்கள். “அங்கிருந்து ஒரு போனாவது போட்டிருக்கலாம்ல” என்று கேட்டால், “தோணல” என்பார்கள். படிச்சதெல்லாம் பரீட்சையில மறந்து போயிருக்கும். பிள்ளைக்கு கஜினி சூர்யாவுக்கு வந்த அபூர்வ வியாதி வந்துவிட்டதாக நினைத்துப் பெற்றோர்கள் பதறுவார்கள். டாக்டரிடம் கூட்டிக்கிட்டுப் போய் மெமரிபிளஸ் மாத்திரை வாங்கி காசையும் விரயமாக்குவார்கள்.

“எனக்கு இன்ட்ரஸ்ட்டான விஷயம் எதையும் நான் மறக்கிறதில்லை. எனக்குப் பிடிக்காத, தேவையில்லாத, முக்கியம்னு தோணாததைத்தான் மறக்குறேன்” என்று எடுத்துச் சொல்லணும். “என்னைக்காவது என் பெர்த்டே, அப்பாவோட சம்பள தேதி, கேர்ள் பிரெண்டோட செல்போன் நம்பர், ப்ரோ கபடி, ஐபில் கிரிக்கெட் டைம் டேபிளை மறந்திருக்கேனா?” என்று கேட்டு இத்தனை நாளாக மூடிக்கிடந்த பெற்றோர்களின் ஞானக்கண்ணைத் திறக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x