அதுவொரு மாய உலகம்

அதுவொரு மாய உலகம்
Updated on
1 min read

நெல்லை மா. கண்ணன்

குலசை என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் கடற்கரை தசரா பண்டிகையின்போது வேறொரு உலகமாக மாறிவிடும். தூத்துக்குடி மாவட்டத்தின் இந்தக் கடற்கரையோர ஊரிலுள்ள முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் போடும் வேடங்களே இதற்குக் காரணம்.

நாட்டில் வேறு எந்த ஊரிலும் இதுபோன்றதொரு தசரா விழாவைப் பார்க்க முடியாது. அந்த ஊரில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்களிடையே நிறைந்து தளும்பும் பக்தியைப் பார்க்கும்போது, நமக்குள்ளும் ஒருவித பரவச நிலை தொற்றிக்கொண்டுவிடும்.

அந்தப் பரவசத்தை ஒளிப்படமாகப் பதிவு செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஒளிப்படக் கலைஞரான ராஜேஷ்குமார். குலசையில் அவர் எடுத்த ஒளிப்படங்கள் இங்கே அணிவகுத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in