Published : 15 Oct 2019 01:37 PM
Last Updated : 15 Oct 2019 01:37 PM

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

தொகுப்பு: கனி

மருத்துவ நோபல்

அக். 7: வில்லியம் ஜே. கேலின், சர் பீட்டர் ஜே. ராட்கிளிஃப், கிரேக் எல். செமென்ஸா ஆகியோர் உயிரணுக்கள், ஆக்ஸிஜன் கிடைக்கக்கூடிய தன்மைக்கு ஏற்ப எப்படித் தகவமைத்துக் கொள்கின்றன என்பதை கண்டுபிடித்ததற்காக மருத்துவ நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சனியில் 20 நிலவுகள்

அக். 8: சனி கோளில் இருபது புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தக் கோளுக்கான நிலவுகளின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளைக் கொண்டது சனி. முன்னதாக 79 நிலவுகளுடன் வியாழன் கோள் இந்தப் பெருமையைப் பெற்றிருந்தது.

இந்தியாவுக்கு 68-ம் இடம்

அக். 9: உலகப் பொருளாதார அமைப்பின் (WEF) 2019 ‘உலகளாவிய திறன் பட்டிய’லில் (GCI) இந்தியா 68-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 58-ம் இடத்தில் இருந்தது. சிங்கப்பூர், அமெரிக்கா, ஹாங்காங் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

நிதி நெருக்கடியில் ஐ.நா.

அக். 9: ஐ.நா. அவை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இதனால் 37,000 ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா (22%), சீனா (12%) உட்பட ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 129 நாடுகள் மட்டுமே நிதி அளித்திருக்கின்றன.

இயற்பியல் நோபல்

அக். 8: ஜேம்ஸ் பீப்பில்ஸ் (பிரபஞ்ச வரலாற்றைப் பற்றிய நவீன புரிதலுக்கான கோட்பாடுகள்), மிஷெல் மேயோர், திதியர் கெல்லோ ஆகியோர் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள புறக்கோளை கண்டுபிடித்ததற்காக இயற்பியல் நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியல் நோபல்

அக். 9: ஜான் பி. குட்எனஃப், எம். ஸ்டான்லி விட்டிங்கம், அகிரா யோஷினோ ஆகியோர் லித்தியம்-அயனி மின்கலத் தயாரிப்புக்காக வேதியியல் நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய நோபல்

அக். 10: 2018-க்கான இலக்கிய நோபல் போலந்து எழுத்தாளர் ஒல்கா டோக்கார்ஸுக்கும் 2019-க்கான இலக்கிய நோபல் ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கேவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமைதி நோபல்

அக். 11: எரித்ரியாவுடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைதிவழியில் எடுத்த முன்னெடுப்புகளுக்காக எத்தியோப்பிய பிரதமர் அபே அஹமது அலிக்கு அமைதி நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x