

பதேர் பாஞ்சாலி படமெடுத்த சத்யஜித் ராயைத் தெரியாவிட்டால் சினிமா என்றால் என்னவென்றே அவருக்குத் தெரிந்திருக்காது என்றே சொல்லிவிடலாம். ஏனெனில் இந்திய சினிமாவுக்கு உலக அளவில் அங்கீகாரம் வாங்கித் தந்த இயக்குநர் அவர்.
அவருடைய சாதனைகளுக்காக 1992-ல் ஆஸ்கர் விருது பெற்றவர். இப்போது ஐ.நா. சபை அவருக்கு ஒரு கவுரமளித்துள்ளது. மனித நேயத்துக்காக சிந்தித்த உலக ஆளுமைகள் பதினாறு பேரின் உருவ ஓவியங்களை வைத்துக் கண்காட்சி ஒன்றை ஐ.நா. தலைமையகத்தில் நடத்துகிறது.
கலையின் பெருமையை விளக்கும் இந்த ஓவியக் கண்காட்சியில் சத்யஜித் ராயின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது.
இதில் இடம்பெற்றிருக்கும் மற்றொருவரையும் நமக்கு நன்கு தெரியும், அவர் மலாலா.