

குழந்தைப் பருவத்திலிருந்தே மின்னலை நாம் மிகவும் விரும்புகிறோம். மின்னலடிக்கும்போது கண்களால் அதைப் பார்க்கக்கூட முடியாது, அந்த அளவுக்குக் கண்கள் கூசும். ஆனால் மின்னலைப் பார்ப்பதில் நமக்குப் பயம் கலந்த ஆசை உள்ளது. இங்கே இடம்பெற்றுள்ள மின்னல் காட்சிகள், நீங்கள் எதிர்கொண்ட மின்னல் பொழுதை மனத் திரையில் ஒளிரவிடக்கூடும். மின்னல் என்பது மின்னிவிட்டு உடனே மறைந்துவிட்டாலும் அது மனத் திரையில் நிலைத்துவிடுகிறது அல்லவா?
ஆப்கானிஸ்தானின், கந்தஹார் மாகாணத்தின் மைவாந்த் பகுதியில் ஆயுதம் தாங்கிய வாகனம் ஒன்றைச் சூழ்ந்து மின்னல் வெட்டிய காட்சி.
ஜப்பானின் ஷின்மோடேக் எரிமலை சிகரத்தின் மேலே எரிமலையே வெடித்துச் சிதறுவது போன்று ஏற்பட்ட மின்னல் வெட்டுக்கள். இந்தக் காட்சி கிரிஷிமா நகரத்திலிருந்து எடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பார்ஸ்டோவ் பகுதியில் புயலடித்த நேரத்தில் மின்னலடித்த காட்சி. லாங் எக்ஸ்போஸரைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது.
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் இடியுடன் கூடிய புயலடித்தபோது, ஏற்பட்ட மின்னல் தெறிப்புகள்.
ஐஸ்லாந்தில், வானில் ஏற்பட்ட மின்னல், எரிமலை வெடித்து லாவாக் குழம்பு தெறிப்பதுபோல் பரவிய காட்சி. இது நடந்தது 2010-ல்.