உண்ணவும் உறங்கவும்

உண்ணவும் உறங்கவும்
Updated on
1 min read

வீட்டில் இருக்கும்வரை சுவையான உணவிற்கும் நிம்மதியான தங்குமிடத்திற்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எப்போதும் வீட்டிலேயே நமது பொழுதைக் கழிக்க இயலாது. விடுமுறை நாட்களில் புதிய இடங்களைப் பார்க்கும் ஆவலில் வெவ்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்கிறோம். அங்கெல்லாம் நாம் தங்கவும் உண்ணவும் நேரிடுகிறது. அங்கு சரியான ஹோட்டல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை எழுகிறது. இதைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் ட்ரைவேகோ என்னும் இணையதளம் சிறந்த ஹோட்டல்கள் தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. சுமார் 200 இணையதளங்களில் மேற்கொள்ளப்படும் ஹோட்டல் முன்பதிவுகளின் அடிப்படையில் ஒரு பட்டியலைத் தயாரித்துள்ளது.

அதில் முதல் இரண்டு இடங்களை ராஜஸ்தான் மாநிலமே பெற்றுள்ளது. இங்குள்ள உதய்பூர் நகர் இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. விருந்தினர்களை நன்கு கவனித்து, அவர்களுக்குத் தேவையான சேவையைத் தருகின்றன இங்குள்ள ஹோட்டல்கள். அடுத்த இடத்தில் உள்ளது ஜெய்ப்பூர். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைக் கொண்ட, கடவுளின் நிலம் எனச் சொல்லப்படும் கேரளாவின் கொச்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்பான சிம்லா நகரில் உள்ள ஹோட்டல்கள் ஆறாம் இடத்தையே பிடித்திருக்கின்றன. இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என அழைக்கப்படும் மும்பை பத்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in