

சமீபத்தில் பாரிசுக்குச் சுற்றுலா சென்ற டச்சு வலைப்பூ கட்டுரையாளரான சித் பிரிஸ்ஜெஸ் ஈபிள் கோபுரத்தின் முன்னால் நிற்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துகொண்டார். அந்தப் புகைப்படத்தை போட்டோஷாப் நிபுணர்கள் எப்படியெல்லாம் கேலிக்கூத்தாக மாற்ற முடியுமோ அப்படி மாற்றி வெளியிட அறைகூவலும் விட்டார்.
ஈபிள் கோபுரத்தின் உச்சியில் பிரிஸ்ஜெஸ் கைவிரலை வைத்திருப்பது தொடங்கி, ஈபிள் கோபுரமே விழுந்து கிடக்கும் காட்சிவரை பல்வேறு விதமாக அந்தப் புகைப்படத்தை மாற்றி முகம் தெரியாத போட்டோஷாப் கலைஞர்கள் அசத்திவிட்டனர்.
அவற்றில் சில மோசமானவை. சில கற்பனை ஆற்றலைக் காண்பிப்பவை.
நீங்களும் கண்டு மகிழ: >http://goo.gl/JThHsg