

எந்த ஹேர் ஸ்டைல் நம்முடைய முகத்துக்குப் பொருத்தமாக இருக்கும்? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலைத் தேடும் இளைஞர்கள் நம்மில் அதிகம். உங்களுடைய முகத்துக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் மட்டுமல்லாமல் மனநிலைக்கும் ஏற்ற ஹேர்ஸ்டைலைத் தேர்ந்தெடுப்பதற்கான சில வழிகளைத் தருகிறது சென்னை அட்வான்ஸ்டு ஹேர் ஸ்டுடியோ.
லாங் லுக் (Long Look)
ராக் ஸ்டார்களுக்கும், ராக் ஸ்டார் போல் இருக்க விரும்பு பவர்களுக்கும் இந்த ‘லாங் லுக்’ ஹேர் ஸ்டைல் பொருத்தமானதாக இருக்கும். ஒருவிதமான ‘ரஃப் அண்ட் டஃப்’ மற்றும் துணிச் சலான தோற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்கு இந்த ‘லாங் லுக்’ ஏற்றது.
பீக் லுக் (Peak look)
இந்த ஹேர் ஸ்டைல் சிறிய முகம் உடையவர்களுக்கு ஏற்றது. ஸ்பைசி, ஃபங்கி லுக்கை விரும்பும் இளைஞர்களுக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் இது. இந்த ஹேர்ஸ்டைலில் ‘ஹைலைட்ஸ்’ கொடுக்கலாம்.
க்ரூ லுக் (Crew Look)
போலீஸ், உயர் அதிகாரி களுக்கு இருக்கும் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும் ஹேர் ஸ்டைல் இது. இந்த ஹேர் ஸ்டைல் எல்லாவற்றிலும் தனித்துத் தெரிய வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்குச் சரியான சாய்ஸ்.
டெக்ஸ்சரைஸ்டு லுக் (Texturized Look)
எப்போதுமே கொண்டாட்டமான மனநிலையுடன் இருக்கும் ‘ஃபன் லவர்ஸ்’க்கு இந்த ‘டெக்ஸ் சரைஸ்டு லுக்’ பொருந்தும். கல்லூரி மாணவர்கள் மத்தியில் இப்போது டிரண்டில் இருக்கும் ஹேர் ஸ்டைல் இது. இந்த ஹேர் ஸ்டைல் ‘ஹைலைட்ஸ்’ கொடுக்க ஏற்றது.
கிளாசிக் லுக் (Classic Look)
ஃபார்மலான தோற்றத்தை விரும்பும் இளைஞர்கள் இந்த ‘கிளாசிக் லுக்’கைத் தேர்ந்தெடுக்கலாம். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிமையாக வலம்வர நினைக்கும் இளைஞர்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் இது.
பூஸ்ட் லுக் (Boost look)
தலைமுடி அடர்த்தி குறைவாக இருக்கும் இளைஞர்கள், இந்த ஹேர் ஸ்டைல் மூலம் தங்கள் முடி அடர்த்தியாக இருப்பதைப் போல் காட்டிக்கொள்ள முடியும்.
‘ஹைலைட்ஸ்’ டிரண்டு
இப்போது டிரெண்டில் இருக்கும் ஹேர் ஸ்டைல் ஹைலைட்ஸ்க்கான நிறங்கள் சாக்லேட் மற்றும் ‘ரெட் ரோஜோ’.தலை நிறைய முடி வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல, மொத்தமே 4,5 முடிதான் மிச்சம் மீதியிருப்பவர்கள்கூட இதை தைரியமாக ஃபாலோ பண்ணலாம்!