

லோக்நிதி எனும் இணையதளம் அண்மையில் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் இந்திய இளைஞர்களைப் பற்றி சில விஷயங்கள் முன்வைக்கப்பட்டன.
அவை, பெரும்பாலான படித்த, நகர்புற இளைஞர்களுக்கு டிவிதான் பொழுதுபோக்கு. உயர்கல்வி படிக்கும் சிலருக்குத்தான் இன்டர்நெட் கிடைக்கிறது. பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கைக் குறிக்கோளே நவீன ஆடைகளை அணிவதுதான்.
சமூக பொருளாதார அந்தஸ்து, கல்விநிலை, நகரத்தில் வாழ்வதுதான் பெரும்பாலும் வாழ்க்கை குறிக்கோள்கள். கிராமப்புற இளைஞர்களுக்கு அன்றாட போராட்டத்திலிருந்து விடுதலையாவதே குறிக்கோள். நகரப்புறங்களில் உள்ள சிறு இளைஞர் பகுதி உண்மையான சமூக மாறுதல் பற்றிப் பேசுகிறது.
சமூக கட்டமைப்பும் சமூக உறவுகளும்தான் குடும்பம் மற்றும் சமூகம் பற்றிய அவர்களின் மதிப்பீடுகளை உருவாக்குகின்றன. பெற்றோர்களின் அதிகாரமும் அவர்களின் சமூகப் பார்வையைத் தீர்மானிக்கிறது. பாரம்பரியமும் நவீனமும் இந்திய இளைஞர்களைப் பாதிக்கின்றன.
தேர்தல் ஜனநாயகத்தின் மீது இந்திய இளைஞர்களுக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. இளைஞர்களின் கல்வி நிலையும் இந்திய ஊடகங்களின் தாக்கமும் இளைஞர்களின் ஜனநாயகம் மற்றும் அரசியல் பற்றிய கருத்துகளைப் பாதிக்கின்றன.
வேலையில்லாமையும் வறுமையும்தான் இந்தியாவின் முன் உள்ள பெரும் பிரச்சினைகள் என்கின்றனர் இளைஞர்கள். அது தவிர்த்த மற்ற முக்கிய பிரச்சினைகளில் முதலாவதாக எயிட்ஸ் நோய் ஒழிப்பு வருகிறது.
மகப்பேறுகால ஆரோக்கியமும் குழந்தைப் பருவ மரணங்களும் வருகின்றன. ஆண்-பெண் சமத்துவப் பிரச்சினை பொதுவாக ஆண்களைவிட அதிகமாகப் பெண்களிடமிருந்து வருகிறது.
பெண்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு தருவதை நகரப்புற இளைஞர்களை விட அதிகமாகக் கிராம இளைஞர்கள் ஆதரிக்கின்றனர்.
பெரும்பாலான இளைஞர்கள் அமெரிக்காவை தெரிந்து வைத்துள்ளனர். படித்த நகர்ப்புற இளைஞர்கள் உலகமயத்தை ஆதரிக்கின்றனர்.