வசந்த’ஸ் 5 - எங்கள் சாய்ஸ்

வசந்த’ஸ் 5 - எங்கள் சாய்ஸ்
Updated on
2 min read

பா.வசந்தன், பி.சி.ஏ.
அரும்பாவூர், பெரம்பலூர்

பிடித்த புத்தகம்:

‘பூ’ திரைக்கதை ஆசிரியர் சா.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘அரசியல் எனக்கு பிடிக்கும்’ எனும் புத்தகம் அரசு, அரசியல், அரசாங்கம் பற்றிய புரிதலையும் அரசியல் பங்கேற்பின் அவசியத்தையும் விவரிக்கும் நூல்.

கனவுப் பயணம் :

எழில் கொஞ்சும் எல்லைப் பகுதியான காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.

பிடித்த படம் :

‘ரத்தக் கண்ணீர்’ - மூடநம்பிக்கைகளுக்கும், தனிமனித சீர்கேட்டுக்கும் சாட்டை அடியாய் அமைந்த படம்.

பிடித்த இசை :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அனைத்தும். ‘பம்பாய்’ பட இசை ரொம்ப பிடிக்கும்.

பிடித்த இடம்:

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை தமிழனின் பெருமை என்ற விதத்தில் மிகவும் பிடிக்கும். அது தவிரவும் குமரிக் கடலில் உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் சூரிய உதயம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in