கோடைக் கால காற்றே...

கோடைக் கால காற்றே...
Updated on
2 min read

கோடை தொடங்கிவிட்டது. வெயிலை நினைத்தாலே வெளியில் போக மனம் வராது. ஆனால் அதற்காக எப்போதும் இளைஞர்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க முடியுமா? கோடைகால வகுப்புகளுக்குச் செல்ல, நண்பர்களைப் பார்க்க எனப் பல காரியங்களால் வெளியில் செல்லத்தானே வேண்டும். அதைத் தவிர்க்க முடியாதே. அப்போது என்ன செய்ய வேண்டும். ஒரே வழி கூடுமானவரை கோடை காலத்திற்கு ஏற்ற ஆடையை அணிய வேண்டும். கோடையைத் தாங்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டும். குறைந்தபட்சம் நல்ல தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.

சரியான ஆடைகளை அணியாவிட்டால் அது அநாவசிய அவதியைத் தரும். அதிலும் வெயில் காலத்தில், வெளியில் செல்வது என்பது ஒரு தர்மசங்கடமான விஷயம். ஏனெனில், உடலுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காவிட்டால் நீர் வறட்சி ஏற்படும். இதனால் உடல் களைப்படையும். சோர்வு ஏற்படும். வெயில் காலத்தில் வியர்வை வேறு அதிகமாக வெளியேற்றும் இதனால் வியர்வையை உறிஞ்சும் வகையிலான ஆடைகளை அணிவது அவசியம்.

வெயில் காலத்தில் கைத்தறி மற்றும் காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில் இவை வியர்வையை எளிதில் உறிஞ்சும். காற்றுப் பட்ட உடன் உலர்ந்துவிடும். அதிமாக வியர்வைவை ஆடையில் தங்க விடாது.

ஷூ அணிபவர்கள் கோடைகாலத்தில் காட்டன் சாக்ஸ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நைலான் சாக்ஸ்களை ஒதுக்கிவைத்துவிடுவது உத்தமம். சூரிய ஒளியின் கடுமையிலிருந்து தப்பிக்க பருத்தி தொப்பிகளை அணியலாம். அதிக வெயிலால் தலையில் ஏற்படும் சூட்டைக் குறைக்க இது உதவும். கண்களைப் பாதுகாக்க தரமான கூலிங்கிளாஸ் கண்ணாடிகளை அணிந்துகொள்ளலாம்.

இளநீர், பதநீர், நீர்மோர் போன்ற நமது சூழலுக்கு ஏற்ற நமது உடம்புக்கு நோவு தராத ஆரோக்கியத்தை மட்டுமே வழங்கும் பானங்களை முடிந்தபோதெல்லாம் அருந்தலாம். இவையெல்லாம் நம்மை ஓரளவு வெயிலின் கொடுமையிலிருந்து பாதுகாக்கும் என நம்பலாம்.

பாலிஸ்டர் துணியால் ஆன ஆடைகளை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வெயில் காலத்திற்கு சிறிதும் பொருத்தமற்றவை. ஆகவே காட்டன் ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கோடைகாலத்தில் அடர்த்தியான வண்ணங்களைக் கொண்ட ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். மெல்லிய வண்ணங்களைக் கொண்ட ஆடைகளையே அணிவது நல்லது. அடர்த்தியான வண்ணங்கள் வெப்பத்தை வாங்கிவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. இவை உடலுக்கு கேடு விளைவிக்கும். வெள்ளை போன்ற எளிய வண்ணங்கள் வெப்பத்தை வாங்கினாலும் உடனே உமிழ்ந்துவிடும். இதனால் உடம்பில் சூடு ஏறுவது மட்டுப்படும். எனவே சருமம் அதிகமாகப் பாதிக்கப்படாது.

கோடையில் மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியாமல் இருப்பது அவசியம். தளர்ச்சியான ஆடைகளே தங்கு தடையற்ற காற்றுக்கு உதவும். உடம்புக்கும் ஆடைக்கும் இடையே தாராளமாக காற்று ஊடுருவினால் வியர்வை உலர உறுதுணையாக இருக்கும்.

ஷூ அணிபவர்கள் கோடைகாலத்தில் காட்டன் சாக்ஸ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நைலான் சாக்ஸ்களை ஒதுக்கிவைத்துவிடுவது உத்தமம். சூரிய ஒளியின் கடுமையிலிருந்து தப்பிக்க பருத்தி தொப்பிகளை அணியலாம். அதிக வெயிலால் தலையில் ஏற்படும் சூட்டைக் குறைக்க இது உதவும். கண்களைப் பாதுகாக்க தரமான கூலிங்கிளாஸ் கண்ணாடிகளை அணிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in