

சை. அ. சையத் அஜ்மல் தஹசீன்,
இளநிலைக் கல்வியியல்,
ஸ்ரீவாரி கல்வியியல் கல்லூரி,
தென்னரசம்பட்டு, திருவண்ணாமலை
பிடித்த படம்:
இந்தியன். லஞ்சத் திற்கு எதிராகக் குரல் எழுப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு தேசத் தியாகியின் வாழ்வைக் காட்டிய மிகச் சிறந்த படம்.
பிடித்த இசை:
தாய் மண்ணை வணங்கிப் போற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் பாடல். தேசப் பற்றுணர்வைப் பொங்கச் செய்யும் அற்புதமான இசை.
பிடித்த இடம்:
பாம்பன் பாலம். நடுக்கடலைக் கடந்து ராமேஸ்வரத்திற்குச் செல்லத் துணைபுரியும் இந்தப் பாலத்தில் பயணிப்பது சுகமான அனுபவம்.
கனவுப் பயணம்:
எல்லா இந்திய நதிகள் மீதும் படகுப் பயணம் செய்ய ஆசை.
பிடித்த புத்தகம்:
அக்னிச் சிறகுகள். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சுயசரிதை புத்தகமான இது சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு மேலும் லட்சிய வேட்கையைத் தூண்டும்.
‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in