நெட் உலா: டப்ஸ்மாஷில் கெத்து காட்டும் இளைஞர்!

நெட் உலா: டப்ஸ்மாஷில் கெத்து காட்டும் இளைஞர்!
Updated on
1 min read

திரைப் படங்களில் வரும் வசனங்களையும் பாடல் வரிகளையும் ‘டப்ஸ்மாஷ்’ செய்து வெளியிடும் கலாச்சாரம் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த டப்ஸ்மாஷில் கலக்கலாக நடிக்கும் இளைஞர்களுக்குத் தனியாக ரசிகர் கூட்டமே இருக்கிறது. அப்படி ஒரு ‘டப்ஸ்மாஷ்’ பிரபலம்தான் கோவையைச் சேர்ந்த இளைஞர் பிரேம் ஷ்யாம்.

ஹிந்துஸ்தான் கல்லூரியில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கும் பிரேம் ஷ்யாம், அன்னையர் தினத்தன்று டப்ஸ்மாஷ் ஒன்றை வெளியிட்டார். அது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ‘எம். குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி’ படத்தில் ஜெயம் ரவி தன் அம்மா இறந்த பிறகு அழுதபடி பேசும் வசனத்தை டப்ஸ்மாஷ் செய்திருந்தார் பிரேம். இந்த வீடியோவில் பிரேமின் நடிப்பு பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையும் வகையில் அமைந்திருந்தது. யூடியூப்பில் இந்த வீடியோ 63 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஃபேஸ்புக் பக்கத்தில் 30 லட்சம் பேர் விரும்பியிருக்கிறார்கள்.

பொழுதுபோக்குக்காக டப்ஸ்மாஷ் செய்ய ஆரம்பித்த பிரேமுக்கு இந்த வரவேற்பு பெரும் உற்காசத்தைக் கொடுத்தது. பிறகென்ன? தற்போது இதையே அவர் முழுநேர வேலையாகச் செய்யத் தொடங்கிவிட்டார் .

“என்னுடைய டப்ஸ்மாஷுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை. இந்த வீடியோவுக்குக் கிடைத்த பாராட்டுகள் எனக்குப் பெரிய ஊக்கம் அளித்திருக்கிறது. அத்துடன் இந்த வீடியோ எனக்கு ஒரு குறும்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்திருக்கிறது. சினிமாவில் நடிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையை எனக்கு அளித்திருக்கிறது டப்ஸ்மாஷ்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் பிரேம் ஷ்யாம்.

அதோடு நின்றுவிடவில்லை பிரேம். முதன்முறையாக கோலிவுட் திரைப்படத்தின் டிரெய்லரை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டார். அது இயக்குநர் அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் டிரெய்லர். இந்த டப்ஸ்மாஷ் வெளியான இரண்டே நாட்களில் இணையதளத்தில் 25 ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

டப்ஸ்மாஷில் இப்படியொரு மாஸ் காட்டுகிறார் இந்த இளைஞர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in