

வீடு, மனைகள் வாங்க விரும்பும் மக்களுக்கு ஏராளமான இணையதளங்களும் இன்று வழிகாட்டுகின்றன. நமக்குத் தேவையான, நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடுகளை வாங்குவதற்கான தகவல்களை ஏராளமான இணையதளங்கள் வழங்குகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு இணையதளம் இந்தியா ரியல் எஸ்டேட் மேப்.காம்.
மேப் மூலம் வீடு தேடும் வசதி இந்த இணையதளத்தில் உள்ளது. தேடு பொறியில் கேட்கப்படும் கேள்விகளை நிரப்பினால் மேப்பிலேயே வீடுகள் பல வண்ணங்களில் பளிச்சிடுகின்றன. வீடு குறியீடு உள்ள இடத்தில் கிளி செய்தால் விற்கப்படும் வீடு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல நகரங்களில் உள்ள வீடுகள் பற்றியும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தியா ரியல் எஸ்டேட் மேப்.காம் மூலம் நமக்குத் தேவையான எல்லாத் தகவல்களும் கிடைத்துவிடும் என்று சொல்லி விட முடியாது.
ஆனாலும் நாம் வீடு வாங்க உத்தேசிக்கும் இடத்திற்கு அருகில் என்னென்ன பகுதிகள், ஊர்கள் உள்ளன போன்ற தெளிவான தகவல்களை மேப் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
வீடு வாங்கத் திட்டமிட்டு இணையதளங்களில் தகவல்களை சேகரித்துக் கொண்டிருப்போர் http://indiarealestatemap.com/ என்ற இணையதளத்துக்கும் சென்று பார்வையிடலாம்.