பழைய பங்களா... புது கஃபே !

பழைய பங்களா... புது கஃபே !
Updated on
2 min read

ஒரு பாழடைந்த பங்களாவைப் பார்த்தால் நமக்குப் பொதுவாக என்ன தோன்றும்? பயமாக இருக்கும். ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அங்கே இருப்பதாக நினைத்து, அந்த பங்களா பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டோம்.

ஆனால் அதே போன்ற ஒரு பங்களாவை, அற்புதமான இத்தாலியபாணி கஃபேயாக மாற்றினால், உடனே அங்கு போய் ஒரு பீட்ஸாவை ஆர்டர் செய்துவிட மாட்டோமா? இப்படி வித்தியாசமான, ருசிக்குப் பஞ்சமே இல்லாத கஃபே அடையார் காந்தி நகரில் இருக்கிறது. அதன் பெயர் கிரேவ் யார்ட் (Crave yard)கஃபே!

உங்கள் வீட்டில் ஜிம்மி, டாமி, லூசி போன்ற செல்லப் பிராணிகள் ஏதாவது இருந்தாலும் அதையும் உங்களுடன் கூட்டிக்கொண்டு போகலாம். அங்கு வேலை பார்ப்பவர்களே அதை வாக்கிங் அழைத்துச் செல்வார்கள். அவை ஃப்ரீயாக கஃபே உள்ளே சுற்றலாம். ஆனால் கிச்சன் உள்ளே மட்டும் ‘நோ என்ட்ரி’ என்கிறார் கிரேவ் யார்ட் கஃபேயின் உரிமையாளர் ஹரிஷ்.

ஸ்பைஸ் ஜெட் விமான வேலை பிடிக்காத இவருக்கு கஃபேயைப் பராமரிப்பது மிகவும் பிடித்திருக்கிறது. 30 அல்லது 40 வயதில் கஃபே திறக்க வேண்டும் என்று நினைத்திருந்த இவர் 20களிலேயே அதைச் சாதித்துவிட்டார்.

“இரண்டு வருஷத்துக்கு முன்னால ரஜினி பிறந்த நாளன்று இந்த கஃபேயைத் திறந்தேன். முதலில் ஏதோ ‘பார்ட்டி கிளப்’னு நெனச்சு இங்க குடியிருக்கவங்க எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஆனால் இப்போது அனைத்து அப்பார்ட்மெண்ட்டுகளிலிருந்தும் இங்க சாப்பிட வாராங்க” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார் அவர்.

கஃபேயில் எப்போதும் இளைஞர் கூட்டம்தான். அடையாரைச் சுற்றி இருக்கும் ஐ.ஐ.டி. பால வித்யா மந்திர் பள்ளி, ஏ.சி.ஜே. போன்ற கல்லூரிகளிலிருந்து கூட்டம் கூட்டமாக மாணவர்கள் வந்து குவிகிறார்கள். அமைதியான சூழல், முற்றிலும் வித்தியாசமான இயற்கை எழிலான இடம், நியாயமான விலையில் சாப்பாடு இதைவிட வேறென்ன வேண்டும் எங்களுக்கு என்று உற்சாகமாக அங்கு வந்திருந்த இளைஞர்கள் சொல்கிறார்கள்.

இங்கே இருக்கும் ஒவ்வொரு அறையிலும் புதுமையான ரசனை காணப்படும். பழைய மரக் கதவுகள் அழகான மேசைகளாகியுள்ளன. வானத்திலிருந்து வைரங்கள் கொட்டுவதைப் போன்ற சுவரோவியங்கள், புத்தக விரும்பிகளுக்கு நாவல்கள், இசை விரும்பிகளுக்கு கிட்டார், மேலும் ‘போர்ட் கேம்ஸ்’ எனக் கலக்குகிறார்கள்.

“இந்த இடத்தைக் கலைநயத்தோடு மாற்றியதற்கு என் நண்பன் ஜாய்ஸிடினுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். கிராபிக் டிசைனரான அவர், அரிசியைக்கூடக் கலைப்பொருளாக மாற்றும் திறமை கொண்டவர்” என்று பெருமையோடு சொல்கிறார் அவர்.

கஃபேயின் ஸ்பெஷலான இடம் மொட்டைமாடிதான்! சுற்றிலும் மரம் செடி கொடியென இயற்கை பூத்துக் குலுங்குகிறது. மரங்களின் நிழலில் ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டு காபியை ருசிக்கலாம். கிராமம் போன்ற சூழலாக மொட்டைமாடியை மாற்ற வேண்டும் என்ற யோசனை ஹரிஷுக்கு இருக்கிறது.

சினிமா பிரபலங்களும் இங்கு வந்துசெல்கிறார்கள். அமலா பால், ரேஷ்மி மேனன், விஷ்ணு, விஷால், நிக்கி கல்ராணி, ‘நண்டு’ ஜகன் போன்ற பல ஸ்டார்கள் இங்கு வருவது வழக்கமாம். சினிமா ஷூட்டிங்கும் நடந்திருக்கிறது! ‘அகம்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வழியே படிக்கும் மாணவர்களுக்கான பாட வகுப்புகளும் அவ்வப்போது இங்கு நடைபெறுகின்றன. சினிமாவுக்கு மட்டுமின்றி கல்விக்காகவும் தன் கிரேவ் யார்ட் கஃபேயைத் திறந்துவைத்துள்ளார் ஹரிஷ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in