டோகுகவா காலத்திற்கு முன்னர் டய்கோ என்ற தளபதி இருந்தார். அவர் ஜப்பானியத் தேநீர்ச் சடங்கு குறித்து சென்- நோ ரிக்யு என்ற குருவிடம் பயின்றார். அமைதியை அழகியல் ரீதியான வெளிப்பாடாகவும், ஆன்ம திருப்தியைக் கலையாகவும் மாற்றிய குரு அவர். டய்கோவிடம் பணிபுரிந்துவந்த போர்வீரன் கேடோ, தனது தளபதி நாட்டைப் பாதுகாப்பதில் அக்கறை இல்லாமல் இருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டான். அதன் காரணமாகத் தேநீர் சடங்கைக் கற்றுக்கொடுத்த குருஆன சென்-நோ ரிக்யுவைக் கொலை செய்யவும் அவன் முடிவெடுத்தான்.
ஒருநாள் அந்த வீரன் சென்-நோ ரிக்யுவை, தன் வீட்டில் நடக்கும் தேநீர்ச் சடங்குக்கு அழைத்தான். அவரும் விருந்து நடக்கும் இடத்திற்குச் சென்றார்.
அங்கு போனதும் வீரனின் நோக்கத்தைப் புரிந்துகொண்டார் குரு. தேநீர்ச் சடங்கு என்பதே மன அமைதிக்காக செய்யப்படுவது என்று அவனிடம் கூறியவர், வாளை அறைக்குள் எடுத்துவர வேண்டாம் என்று நிபந்தனை விதித்தார். ஆனால் அதற்கு கேடோ செவிமடுக்கவில்லை.
“ நான் ஒரு போர்வீரன். எப்போதும் என்னிடம்தான் வாள் இருக்கும்” என்றான் கேடோ.
“அப்படியே ஆகட்டும். தேநீர் அறைக்குள் நீ வாளை எடுத்துக்கொண்டு வரலாம்” என்றார் குரு சென்-நோ ரிக்யு.
அந்தத் தேநீர் விருந்து நடக்கும் அறையில் உள்ள கரி அடுப்பில் கெண்டி கொதித்துக் கொண்டிருந்தது. திடீரென்று அதன் அருகில் அமர்ந்திருந்த குரு பாத்திரத்தின் மூடியை எடுத்தார். அறை முழுவதும் ஆவியும் புகையும் எழுந்தது. பாத்திரமும் ஆடியதால் சாம்பலும் பறந்தது. பாத்திரம் ஆடியதைப் பார்த்துப் பதறி எழுந்த வீரன் கேடோ, அறைக்கு வெளியே ஓடினான். நடந்த சம்பவத்துக்காக குரு, வீரனிடம் மன்னிப்புக் கேட்டார்.

“ அது என்னுடைய தவறுதான். மீண்டும் அறைக்குள் வா. பதற்றத்தில் வாளை விட்டுச் சென்றுவிட்டீர்கள். அதன் மீது சாம்பல் பட்டுவிட்டது. நான் வாளைத் தூய்மைப்படுத்தித் தருகிறேன்” என்றார் குரு.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வீரன், தான் ஒருபோதும் குரு சென் நோ ரிக்யுவைக் கொல்ல முடியாது என்ற முடிவுக்கு வருகிறான்.