ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது
Updated on
1 min read

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற கால்நடைத் திருவிழாவுக்காகத் தனது கால்நடையை இளம்பெண் ஒருவர் தயார்ப்படுத்தும் காட்சி இது. ராயல் ஹைலேண்ட் ஷோ என அழைக்கப்படும் இந்தக் கால்நடைத் திருவிழாவின் 176-வது ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட படம் இது. ஜூன் 23 முதல் 26 வரை இந்தத் திருவிழா நடைபெற்றது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள பலேரிக் தீவில் உள்ள நகரம் ஸியுடடெல்லா. இங்கே ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரியமான செயிண்ட் ஜான் திருவிழாவில், அணிவகுப்பில் வருகிறது குதிரை ஒன்று. இதைத் தொடுவது அதிர்ஷ்டம் என நம்பப்படுவதால், அதைத் தொடக் கூட்டத்தினர் முண்டியடிக்கிறார்கள்.

லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கிறது ரோஜாக்களைச் சுமந்து செல்லும் இந்தப் படகு. தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப் பட்டதை நினைவுகூர்வதற்காக இந்த ரோஜாப் படகு மிதக்கவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in