புது உடையும் நவீன நடையும்

புது உடையும்  நவீன நடையும்
Updated on
2 min read

ஸ்டைல் ஒன்’ மற்றும் ‘ஐரீஸ்’ நிறுவனம் இணைந்து சமீபத்தில் ‘ஃபேஸ் ஆப் சென்னை’ என்ற நிகழ்ச்சியின் தொடக்கவிழாவை சென்னையில் நடத்தின. தொடர்ந்து 5வது ஆண்டாக நடைபெறும் ஃபேஷன் நிகழ்ச்சி இது. மாடலிங் துறைக்குள் வருபவர்களுக்கு ஸ்டைல் வாக், லுக், பாடி லாங்கு வேஜ் உள்ளிட்ட அடிப்படை மற்றும் அத்தியாவசியமான பயிற்சிகளைக் கொடுப்பதன் நோக்கமே இந்த ஷோ.

கடந்த ஆண்டு 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டும் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஃபோட்டோ ஷூட், மேக்கப் டெஸ்ட் என்று தற்போது பல்வேறு கட்டத் தேர்வுகள் நடந்து வரும் இந்த ஷோவின் இறுதிச்சுற்று ஜூலையில் நடக்கிறது.

நேச்சுரல்ஸ், ஜி.ஆர்.டி. கிராண்ட், ஜுபிடர் ஈவென்ட் மற்றும் வாக்ஸ் குரூப்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சமீபத்தில் சென்னையில் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியை நடத்தின. ஃபேஷன் திருவிழாவாக நடந்த இந்த ஷோவின் புதிய ஃபேஷன் டிசைனர்களை அறிமுகப்படுத்தியதுதான் ஹைலைட். மூன்று நாட்கள் நடந்த இந்த விழாவில் 12 புதிய டிசைனர்கள் வடிவமைத்த புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மூன்றாவது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புத்தம் புதிய வடிவமைப்பிலான இண்டியன் ஃபியூஷன், கன்டெம்ப்ரரி கலைக்‌ஷன், காக்டெய்ல் டிசைன்ஸ், ஈவ்னிங் வேர், வெக்கேஷன் சாரீஸ், ப்ளவுஸஸ் முதலான ஆடைகளை அணிந்து வந்த மாடல்களின் அணிவகுப்பு விழா அரங்கை பிரம்மாண்டமாக்கியது.

]

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in