எங்குக் கட்டலாம், வாங்கலாம் சொந்த வீடு?

எங்குக் கட்டலாம், வாங்கலாம் சொந்த வீடு?
Updated on
1 min read

வீடு கட்டலாம், வாங்கலாம் என்றதும் நிறைய கேள்விகள் எழும். நிறையக் குழப்பங்கள் இருக்கும். வீட்டைச் சொந்த ஊரில் கட்டலாமா, வாங்கலாமா அல்லது எங்குப் பணியில் இருக்கிறோமோ அங்குக் கட்டலாமா, வாங்கலாமா என்று மனதுக்குள் கணக்கு போடுவோம்.

#கனவு இல்லத்தை ஒரு சொத்தாக மட்டும் பார்த்தால் எங்கே கட்டினாலும் அதன் மதிப்பு ஒன்று தான்

#கனவு இல்லம் நம் உணர்வில் கலந்ததாக இருக்கும் போது அது நம் அருகிலேயே இருப்பது நல்லது

#சொந்த ஊரில் கட்டப்படும்போது எவ்வளவு தூரம் அதை உபயோகப்படுத்துவோம் என்பதை கவனிக்க வேண்டும்.

#வேலையில் சேர்ந்து திருமணம் ஆனவுடன் பெற்றோர்கள் தனிமரம் ஆக்கப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நம் இல்லம் சொந்த ஊரில் இருந்தால் பெற்றோர்களுக்கு தனிமையின் உறைவிடமாக

#மாறி விட வாய்ப்புகள் அதிகம். பண்டிகை நாட்களுக்கு மட்டுமே வந்து தங்கிச்செல்ல உபயோகப்படும் விடுதி போல மாறும் வாய்ப்பு அதிகம்.

#வீட்டை எங்கோ கட்டிப் பார்த்து ரசிப்பதை விட நாம் வாழும் இடத்தில் வாங்கினால் வாடகை பணமும் ஊருக்குச் சென்றுவரும் அலைச்சலும் மிச்சமாகும். இவற்றைச் சிந்தித்து வீடு எங்கே கட்டுவது அல்லது வாங்குவது என்பதையும் முடிவு செய்யலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in